சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் பரிசு மட்டுமா! இன்று வரப்போகும் "இன்னொரு" ஸ்பெஷல் அறிவிப்பு.. தமிழக அரசின் மேஜர் முடிவு?

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கலுக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசுகள் தொடர்பாக இன்று டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக இன்னொரு முக்கியமான ஆலோசனை கூட்டமும் இன்று நடக்க உள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கலுக்கு இந்த முறை 1000 ரூபாய் பணத்துடன் கரும்பு, அரிசி, பருப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. எல்லா வருடமும் பொங்கல் சமயத்தில் அரசு சார்பாக சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு பொருட்கள் இந்த வருடம் வழங்கப்பட உள்ளது.

 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு: இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம் ஆயிரம் ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு: இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம்

டோக்கன்

டோக்கன்

இந்த முறை பொங்கல் பரிசு பொருட்களை வாங்கும் போது ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டோக்கன் இருப்பவர்கள் மட்டுமே இந்த பணத்தை பெற முடியும். அந்த டோக்கனில் இருக்கின்ற நாளில் மட்டும் பணத்தை பெற முடியும். இன்று முதல் இந்த டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. அந்த டோக்கனில் எந்த நேரத்தில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்று இருக்கும். ரேஷன் கடை அளவு, வசதி ஆகிவற்றை வைத்து ஒரு நாளைக்கு 100 முதல் 500 பேர் வரை இப்படி டோக்கன் பெறுவார்கள். இவர்கள் அந்த டோக்கனில் இருக்கும் நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்றால் வரிசையில் நிற்காமல் எளிதாக பணம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

பேருந்து

பேருந்து

இன்னொரு பக்கம் பேருந்துகள் குறித்து தமிழ்நாடு அரசு இன்று தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க உள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல்

பொங்கல்

சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்த முறை பொங்கலுக்கு நீண்ட விடுமுறை வர உள்ளது. 5-6 நாட்கள் பல அலுவலகங்களில் விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் மக்கள் இந்த முறை அதிக அளவில் வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இன்று தமிழ்நாடு அரசு இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது.

சிறப்பு

சிறப்பு

கடந்த தீபாவளிக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. 3 நாட்களில் மொத்தமாக 16,888 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் கூடுதலாக 3 நாட்களில் 10518 பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவை உள்ளிட்ட மற்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு 6370 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த முறையும் கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக இன்று நடக்கும் ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த முறை ஆம்னி பேருந்துகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மக்கள் எளிதாக வீட்டிற்கு செல்லவும் வசதியாக போன முறையை விட 2000 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடக்கும் ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.

English summary
Tamil Nadu government to decide on Pongal Special buses today after the meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X