தட்டித் தூக்குது தமிழக அரசு.. பட்டதாரிகளுக்கு இது தான் தீபாவளிப் பரிசு! அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டதாரிகளுக்கு தீபாவளி பரிசாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் 278 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோபி செழியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," உயர்கல்வியில் தமிழ்நாடு என்றென்றும் முதன்மை இடத்தில் திகழ பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நமது முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள்.
தமிழகத்தில் மருத்துவமும் உயர்கல்வியும் தனது இரு கண்களாகக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதன் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

கோவி செழியன் அறிவிப்பு
உயர்கல்வியில் நமது மாணாக்கர்கள் என்றென்றும் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்பதற்காகவும் தொழில்நுட்பத் துறையில் உலக நாடுகளுக்கிடையே உள்ள போட்டியிலே வென்றெடுக்க நமது மாணவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வேலை தேடுபவராக இல்லாமல் தொழில் முனைவோராக திகழ வேண்டும் என்பதற்காக மாணாக்கர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் முதல்வராக திகழ வேண்டும் என்ற ஒரே நோக்கில் நான் முதல்வன் என்ற முத்தான திட்டத்தை வழங்கி அனைத்து மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருகிறார் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
மு.க.ஸ்டாலின் திட்டம்
உயர்கல்வி பெற பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் சுய மரியாதையுடன் உயர்கல்வி பயிலவும் புதுமைப்பெண் தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறார் நமது முதலமைச்சர் அவர்கள்.
கலை அறிவியல் கல்லூரிகள்
கடந்த நான்கரை ஆண்டுகளில் 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வழங்கியதுடன் இதில் இந்த கல்வி ஆண்டு மட்டும் பதினாறு புதிய கல்லூரிகளை அறிவித்து தொடங்கியதுடன் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒப்புதல் அளித்து சேர்க்கை பெற்றுள்ளனர். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் அந்தந்த பகுதியில் உள்ள தொழில் முறைக்கு ஏற்ற பல்வேறு புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம்
மாணவர்களின் கல்வி கற்கும் திறன் எவ்வகையிலும் பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பிட தற்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். மேற்படி உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
கோவை அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் - சிக்ஸர் அடித்த ஸ்டாலின்
உதவி பேராசிரியர் நியமனம்
ஏற்கனவே தமிழகத்தில் ஏழை எளிய மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்த அரசு கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கோரிக்கை எழுந்து வரும் நிலையில், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications