Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் தரும் தமிழக அரசு.. அருமையான திட்டம்.. உடனே விண்ணப்பிக்க ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகள் காலத்தே சாகுபடி பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தி திறனை உயர்த்த விரும்புகிறது தமிழக அரசு. இதற்காக விவசாயிகள் ட்ரோன் கருவிகளை வாங்க ரூ.5 லட்சம் வரை மானியம் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

இன்றைய சூழலில் விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை. விவசாயம் செய்யும் கடைசி தலைமுறையினராக தற்போது உள்ளவர்கள் இருக்கிறார்கள். தங்களை போல் விவசாயத்தை தங்கள் பிள்ளைகள் செய்யக்கூடாது என்பதில் பல விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் விவசாயத்தை ஊக்குவிக்கவும், விவசாயிகள் நலனுக்காகவும் மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஆனாலும் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதையடுத்து பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க முடியாமல் விவசாயிகள் தடுமாறுகிறார்கள். இதையடுத்த டிரோன் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamil Nadu government to provide a subsidy of up to Rs 5 lakh to farmers to purchase drone equipment

இது தொடர்பாக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "விவசாயத்தில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும், விவசாயிகள் காலத்தே சாகுபடி பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தி திறனை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு, வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகிறது.

இந்த திட்டம் முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு, தற்போது 2-ம் கட்டத்திற்காக 70 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சி நோய் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள டிரோன் போன்ற நவீன வேளாண் கருவிகளும் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

5 லட்சம் மானியம்: 2023-24-ம் நிதியாண்டில், தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில், டிரோன்கள் வாங்க விரும்பும் சிறு, குறு, ஆதி திராவிடர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானிய தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானிய தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது.

பட்டியல் இனத்தவர்கள்: ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

ட்ரோன் கருவிகள் : விவசாயக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மூலம் மானியத்தில் அமைக்கப்படும் வட்டார மற்றும் கிராம அளவிலான வேளாண் எந்திர வாடகை மையங்களில் தேவைப்படுகின்ற வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுடன் சேர்த்து டிரோன் கருவிகளையும் மானியத்தில் பெறலாம். இதற்கு 40 சதவீதம் அல்லது ரூ.4 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

ட்ரோன் மானியம் எப்படி: டிரோன்களைக் கொண்டு வேளாண் எந்திர வாடகை மையம் அமைக்க அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்ட வேளாண் எந்திர வாடகை மையங்கள், உயர் தொழில்நுட்ப வாடகை மையங்களில் டிரோன்களை வாங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு டிரோன்களின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

வங்கி கடன்: டிரோனை மானியத்தில் பெறும் விவசாயிகள் அதனை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் உரிமத்தினை பெற்று டிரோனை இயக்கலாம் அல்லது ஏற்கனவே பயிற்சி பெற்று உரிமம் பெற்ற இளைஞர்கள் மூலம் இயக்கலாம். டிரோனை வாங்க வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் இருந்து 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. டிரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்" இவ்வாறு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+