பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மகளிர் உரிமைத் தொகை எப்போது? பெரிய அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தற்போது கள ஆய்வு தொடங்கி இருக்கும் நிலையில் விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய பயணிகளுக்கு எப்போது முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மகளிரின் சமூக நலத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் திட்டங்களில் ஒன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமாகும். இந்த திட்டம், முதற்கட்டமாக 2023 செப்டம்பர் மாதம் இருந்து நடைமுறையில் உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்றாக, மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும் இந்த திட்டம் கருதப்பட்டது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள கணிப்பின்படி, மாதம் தோறும் வழங்கப்படும் இந்த நிதி ஒவ்வொரு குடும்ப தலைவிகளின் குடும்பச் செலவுகளை குறைத்து, அவர்களது வாழ்வாதாரத்தை நேரடியாக மேம்படுத்த உதவுகிறது என கூறப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை
முன்னதாக திட்டத்தை ஆரம்பித்த போது அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அது தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் விதமாக மாற்றம் செய்யப்பட்டது. இதனால் சிலர் விண்ணப்பித்தும் பயன்பெற முடியாமல் போய், மகளிரிடையே கடும் அதிருப்தி உருவாகியது. பின்னர் பயனாளிகள் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு, சிலர் நீக்கப்பட்டனர். தற்போது, ஒரே மாதத்தில் 1 கோடி 14 லட்சம் பயனாளிகள் இந்த தொகையை பெறுகின்றனர். அவர்களின் வங்கி கணக்குகளில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 வரவாகக் கிடைக்கிறது.
குடும்ப தலைவிகள்
இந்நிலையில், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே திட்டத்தில் தவறாக விடுபட்ட தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தொடர்ந்து திமுக அதிகாரிகளிடம் குறை கூறி வந்தனர். இதற்கிடையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஜூன் மாதம் நான்காம் தேதி முதல் புதிய விண்ணப்பங்கள் பெற முடியும் என்றும், இதற்காக தனிப்பட்ட இணையதளம் மற்றும் ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு
மேலும், கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்காக அதிக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு பெற உள்ளன. அரசு தகவலின்படி, விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். ஆன்லைன் சேவையின் அறிமுகம் மகளிருக்கு விண்ணப்ப நிலையை எப்போது வேண்டுமானாலும் அறியமுடியும். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி அனைத்து தகுதி வாய்ந்த மகளிருக்கும் ரூ.1,000 மாதாந்திர தொகை வழங்கப்படுவதில் அரசு உறுதியாக உள்ள நிலையில், புதிய பயனிகளுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
திண்டுக்கல்லில் விழா ஒன்றில் பேசிய அவர்," தமிழ்நாடு அரசு மகளிர் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நம்முடைய அரசு மகளிருக்கான அரசாக விளங்குகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் அரசு பேருந்தில் 800 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் 1 கோடியே 20 இலட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் அனைத்து மகளிர் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்." என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications