புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒரு போதும் ஏற்காது.. அன்பில் மகேஷ் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வித்துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக பல நூல்கள் சார்பாக பல நூல்கள் மொழிபெயர்த்துள்ளோம். குறிப்பாக 350க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளோம். மேலும் மற்ற மாநிலங்களை சார்ந்த நூல்களாக இருந்தாலும் அதையும் நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

Tamil Nadu government will not accept the new education policy Anbil Mahesh Poiyamozhi confirmed

இது போன்ற நூல்களை குறைந்தது 100 இடங்களுக்காவது கொண்டு சென்று ஸ்டால்கள் அமைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். குறிப்பாக அனைவரும் DPI வளாகத்திற்கு வந்து நூல்களை வாங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். புதிது புதிதாக வரும் நூல்களை மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று நோக்கத்தோடு பணியாற்றி வருகிறோம். குறிப்பாக வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதை ஒரு தொகுப்பாக கொண்டு நூலாக வெளியிட்டுள்ளோம்.

சென்னையில் ஒரு ஸ்டால் அமைத்துள்ளோம் அடுத்ததாக தமிழ்நாட்டில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற திருச்சியில் ஸ்டால் அமைக்க வேண்டும் என்று நோக்கத்தில் தற்போது ராசி, சுமதி ஆகிய 2 கடைகளிலும் ஸ்டால்கள் அமைத்து நூல்களை வெளியிட்டுள்ளது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

"தமிழ்நாட்டுக்கு என மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வித்துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்க்க தமிழகத்துக்கு என்ன தேவை என்பதை அறிந்து மாநில கல்விக்கொள்கையை உருவாக்கி வருகிறோம்.

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளித்த அன்பில் மகேஷ், பிரதமரின் ஸ்ரீ' பள்ளிகளுக்கான கையெழுத்து இடுவதற்கு ஒரு குழு அமைத்து இருக்கிறோம். அதற்காக நாங்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தமாகாது. நமக்கு தரவேண்டிய மூன்றாவது தவணை நான்காவது தவணை 1800 கோடி மட்டுமல்ல அடுத்த ஆண்டு தரவேண்டிய 3 ஆயிரத்து 800 கோடி ரூபாயையும் இதில் தொடர்புப்படுத்துகின்றனர்.

ஆனால் இரண்டையும் லிங்க் செய்வது போல செய்கின்றனர் அமைச்சர் என்பதை தாண்டி திமுக காரனாக கண்டிப்பாக இதை எதிர்ப்பேன். இதில் தமிழக முதலமைச்சர் என்ன ஆலோசனை சொல்கிறார்கள், நம்முடைய மாநிலத்திற்கு என்ன தேவையோ மாநில கல்விக் கொள்கையை அதனால் தான் உருவாக்கியுள்ளோம். எனவே ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறோம் எனவே அதை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலை கொண்டு வர வேண்டியது தான் எங்களுடைய எண்ணம் அதை நோக்கி தான் நாங்கள் செயல்படுகிறோம்

எங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற்று கொள்கைக்கு செல்வதாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றைக்கும் அதை ஏற்றுக் கொள்ளாது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+