Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்காரு அடிகளார், சங்கரய்யாவுக்கு சட்டசபையில் இரங்கல்.. 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மறைந்த பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. சட்டசபையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி வருகிறார். 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tamil Nadu government will read the condolence resolution for Bangaru Adigalar in Special assembly session

இந்நிலையில் தான் இந்த மசோதாக்களை மாற்றமின்றி மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆளுநரை பொறுத்தமட்டில் ஒரு மசோதாவை ஒருமுறை திருப்பி அனுப்பலாம். 2வது முறையாக தமிழக அரசு அனுப்பினால் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதனால் தான் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி ஆளுநர் ரவியின் செயலுக்கு ‛செக்' வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இன்று சட்டசபையின் சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் பேச உள்ளனர். அதன்பிறகு மசோதா தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கோரிக்கை வைத்து பேசுவர். அதன்படி அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பேசுவர். அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்படும். இது தவிர வேறு அலுவல்கள் இந்த சிறப்புக் கூட்டத்தில் இல்லை.

Tamil Nadu government will read the condolence resolution for Bangaru Adigalar in Special assembly session

முன்னதாக தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் வேணு, வெங்கடசாமி, வேல்துரை ஆகியோரின் மறைவுக்கும், பங்காரு அடிகளார் மற்றும் சங்கரய்யா ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவர் கூறியதாவது:

சட்டசபையின் முன்னாள் உறுப்பினர் வேணு 20.10.2023ல் வேங்கடசாமி 21.10.2023, வேல்துரை 24.10.2023 ல் மறைவுற்றதை இந்த சட்டசபைக்கு வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். வேணு இரண்டு முறை கும்மிடிப்பூண்டி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு நல்ல முறையில் பணியாற்றினார்கள்.

வேங்கடசாமி 3 முறை ஓசூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு செவ்வனே பணியாற்றினார்கள். வேல்துரை 2 முறை சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு சட்டசபையில் சிறப்பாக பணியாற்றினார்கள். இந்த முன்னாள் உறுப்பினர்களின் மறைவால் அவர்களை பிரிந்து வருந்தும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இந்த பேரவை சார்பிலும் என் சார்பிலும் தெரிவித்து கொள்கிறேன்'' என்றார். இதையடுத்து 2 நிமிடங்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு பங்காரு அடிகளார் மற்றும் சங்கரய்யாவுக்கு இரங்கல் தீர்மானத்தை அப்பாவு வாசித்தார். அப்போது, ‛‛
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் 19.10.2023ல் 82வது அகவையில் மறைந்ததை அறிந்து இந்த சபை வருத்தம் கொள்கிறது. ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆன்மிக தொண்டாற்றினார். மேலும் கல்வி, மருத்துவ சேவைகள் வழங்கினார். அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.

எம்.சங்கரய்யா இந்திய விடுதலை போராட்ட வீரர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர். பொதுவுடைமை போராளியான இவர் 15.11.2023ல் தனது 102வது அகவையில் மரணமடைந்ததை அறிந்து அதிர்ச்சியும், துயரமும் இந்த பேரவை அடைகிறது. இளம்வயதில் பொதுவாழ்க்கை வாழ்ந்தவர். உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தனது மண்ணுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இந்தி விடுதலைக்கு முன்பே தேசியம் சார்ந்த செயல்பாடுகளால் பலமுறை சிறைக்கு சென்றவர்.

மதுரை மேற்கு தொகுதியில் 2 முறை, மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். இவரது மகத்தான சேவையை பாராட்டி தமிழக அரசுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது. குடும்பத்தினர், கட்சி தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை சட்டசபை தெரிவித்துள்ளது'' என்றார். இதையடுத்து

Tamil Nadu government will read the condolence resolution for Bangaru Adigalar in Special assembly session

தோப்பூர் திருவேங்கடம் கணியம்பாடி தொகுதியில் எம்எல்ஏவாக பணியாற்றினார். இவர்களுக்கு 2 மணி துளிகள் அமைதி காக்க வேண்டும் என்றார். இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் பங்காரு அடிகளாரை தவிர மற்றவர்கள் அனைவரும் அரசியலில் தொடர்புடையவர்கள், எம்எல்ஏக்களாக இருந்தவர்கள். பொதுவாக குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்து மரணமடையும் நபர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.

பங்காரு அடிகளார் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனராக இருந்தார். இவருக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் உள்ளனர். ஆன்மீகத்தில் பெரிய அளவில் புரட்சியை இவர் செய்தார். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வந்தார். பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது.

இதற்கிடையே தான் சில வாரங்களுக்கு முன்பு பங்காரு அடிகளார் மாரடைப்பால் மறைந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தார். மேலும் அவரது உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் பங்காரு அடிகளாருக்கு இன்றைய சட்டசபை சிறப்பு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. *****

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+