Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைமீறும் மோதல்.. என்ன நடக்குது? வந்த வேகத்தில் மீண்டும் டெல்லிக்கு செல்லும் ஆளுநர் ரவி.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை; ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு அரசுடன் இருக்கும் மோதலுக்கு இடையில் தற்போது திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகள் மீது ஆளும் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார்.

முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். சில மசோதாக்கள் 1 வருடமாக கிடப்பில் இருக்கின்றன.

திரும்ப பெற வேண்டும்

திரும்ப பெற வேண்டும்

இதுபோக மத ரீதியாக ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வருகிறார். மத ரீதியாக கடுமையான கருத்துக்களை அவர் பேசி வருகிறார். ஆளுநர் என்பவர் நடுநிலையாக செயல்பட வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக அதை பின்பற்றி செயல்பட வேண்டும். அப்படி இருக்கும் போது அவர் சானதானம் பற்றி பேச கூடாது. அதேபோல் இந்தியா இந்து நாடு என்று பேச கூடாது. மதம் பற்றி அவர் கருத்து தெரிவிக்கவே கூடாது. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல அவர் செயல்பட கூடாது என்பதுதான் திமுகவினர் ஆளுநருக்கு எதிராக வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு. இதனால் ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக

முக்கியமாக

தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன. அதேபோல் ஆளுநர் ஆர். என் ரவி முதல்நாள் தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். அவர் இதன் மூலம் சட்டசபை வரம்புகளை மீறியதாக புகார் வைக்க உள்ளது. அதோடு ஆளுநர் உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த உரையும் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் மூலம் அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. இதையடுத்தே ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் நேற்று குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது.

சர்ச்சை மேல் சர்ச்சை

சர்ச்சை மேல் சர்ச்சை

மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக எம்.பி.க்கள் இந்த புகாரை வழங்கினர். இதில் வியப்பளிக்கும் விஷயம், அந்த புகாரோடு முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது. ஆளுநர் சொந்த கருத்துக்களை பேசுவதாகவும், அரசியல்வாதி போல பேசுவதாகவும் இந்த கடிதத்தில் புகார் வைக்கப்பட்டு உள்ளது. திமுக எம்பிக்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்த புகாரோடு முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது. ஆளுநர் சொந்த கருத்துக்களை பேசுவதாகவும், அரசியல்வாதி போல பேசுவதாகவும் இந்த கடிதத்தில் புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் ஜனவரி 9 அன்று ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத் தொடர் துவங்கியது. இந்த உரைக்கான வரைவினை தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு முன்னதாகவே அனுப்பி அதற்கு அவரது ஒப்புதல்ஜனவரி 7 ல் பெறப்பட்டது. உரையினை இதனடிப்படையில், இந்த அச்சிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் தனது உரையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு உரையிலிருந்த பல பகுதிகளைப் படிக்காமலும் உரையில் குறிப்பிடப்படாத பல புதிய கருத்துகளை இணைத்தும் உரையாற்றினார். சட்டசபையின் தொடக்க நாளில் அவர் நடந்து கொண்ட விதமும், சட்டமன்ற மாண்பினை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதும் காணப்படுகிறது.

 அறிவுரை

அறிவுரை

கவர்னர் உரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டப் பிரிவு 163 (1) -ன்படி கவர்னர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் நடக்கவேண்டுமென்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்கள் இதில் தலையிட்டு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நடப்பதை உறுதிசெய்யவும், அதன் மூலம் மக்களுக்கு மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும், மக்களாட்சித் தத்துவம் செம்மையடையவும் அவருக்கு அறிவுரை வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கடிதம் வழங்கப்பட்ட மறுநாளே ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு

இதில் ஆளுநர் ஆர். என் ரவி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆலோசனை கேட்டார். பொதுவாக குடியரசுத் தலைவர் இது போன்ற விவகாரங்களில் தாமாக முடிவு எடுக்க மாட்டார். அவர் உள்துறையிடம் ஆலோசனை கேட்டு நடப்பார். அவர்கள் சொல்வதைத்தான் பெரும்பாலும் செய்வார். இந்த நிலையில்தான் ஆளுநர் ரவிக்கு எதிரான புகார் குறித்து உள்துறையிடம் குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்டார். இந்த விவகாரம் தற்போது உள்துறை அமைச்சகத்தின் கையில் உள்ளது. இந்த நிலையில்தான் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளார். இன்று டெல்லி செல்லும் ஆளுநர் உள்துறை அமைச்சக நிர்வாகிகளை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+