ஆளுநருக்கு "அட்வைஸ்" கொடுங்கள்.. ஸ்டாலினின் "மெகா" மூவ்.. சட்டென டெல்லிக்கு பறந்த ரவி.. ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11.20 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சட்டசபை உரை சர்ச்சையான நிலையில் ஆளுநர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன.

புகார்
அதேபோல் ஆளுநர் ஆர். என் ரவி முதல்நாள் தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். அவர் இதன் மூலம் சட்டசபை வரம்புகளை மீறியதாக புகார் வைக்க உள்ளது. இதையடுத்தே ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் நேற்று குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது. மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக எம்.பி.க்கள் இந்த புகாரை வழங்கினர். இதில் வியப்பளிக்கும் விஷயம், அந்த புகாரோடு முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது. ஆளுநர் சொந்த கருத்துக்களை பேசுவதாகவும், அரசியல்வாதி போல பேசுவதாகவும் இந்த கடிதத்தில் புகார் வைக்கப்பட்டு உள்ளது.

டெல்லி பயணம்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11.20 மணிக்கு டெல்லி செல்கிறார். சட்டசபை உரை சர்ச்சையான நிலையில் ஆளுநர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். பரபரப்பான சூழலில் ஆளுநர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது கவனம் பெற்றுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் டாப் தலைவர்கள் சிலரை ஆளுநர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டனர். இதையடுத்து ஆளுநர் ஆர். என் ரவியும் குடியரசுத் தலைவரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாடு விவகாரங்கள் குறித்து இதில் இவர்கள் ஆலோசனை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கடிதம்
முன்னதாக ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதினார். நேற்று திமுக எம்பிக்கள் குடியரசுத் தலைவரிடம் புகாரோடு முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது. ஆளுநர் சொந்த கருத்துக்களை பேசுவதாகவும், அரசியல்வாதி போல பேசுவதாகவும் இந்த கடிதத்தில் புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் ஜனவரி 9 அன்று ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத் தொடர் துவங்கியது. இந்த உரைக்கான வரைவினை தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு முன்னதாகவே அனுப்பி அதற்கு அவரது ஒப்புதல்ஜனவரி 7 ல் பெறப்பட்டது. உரையினை இதனடிப்படையில், இந்த அச்சிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் தனது உரையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு உரையிலிருந்த பல பகுதிகளைப் படிக்காமலும் உரையில் குறிப்பிடப்படாத பல புதிய கருத்துகளை இணைத்தும் உரையாற்றினார். சட்டசபையின் தொடக்க நாளில் அவர் நடந்து கொண்ட விதமும், சட்டமன்ற மாண்பினை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதும் காணப்படுகிறது.

என்ன இருக்கிறது
கவர்னர் உரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டப் பிரிவு 163 (1) -ன்படி கவர்னர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் நடக்கவேண்டுமென்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்கள் இதில் தலையிட்டு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நடப்பதை உறுதிசெய்யவும், அதன் மூலம் மக்களுக்கு மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும், மக்களாட்சித் தத்துவம் செம்மையடையவும் அவருக்கு அறிவுரை வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளார். , இரண்டாவதாக, கவர்னர் என்பவர் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான சார்புநிலையை பொதுவெளியில் எடுத்துக்கொண்டு, பல்லாண்டுகாலமாக பின்பற்றப்பட்டுவரும் நமது மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்கேற்ற வகையில் பணியாற்றுமாறு அறிவுறுத்தவும் ஜனாதிபதியை, முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஆளுநர் ஆர். என் ரவி இன்று அவசர அவசரமாக டெல்லிக்கு செல்கிறார்.












Click it and Unblock the Notifications