தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நான்காம் தர அரசியல் செய்கிறார்.. சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்

தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் உள்ளது. குறிப்பாக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்று விமர்சித்து இருந்தது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் கருத்துக்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என் ரவி நான்காம் தர அரசியல் செய்வதாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:- மாநில ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது.
மதசார்பற்ற நாடு என்பதை மறைத்து, மதசார்புள்ள நாடுதான் என்று திணிப்பது போன்று ஆளுநர்கள் பேசுவது தவறானது. அரசியல் கட்சி பிரமுகர்களை போல ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தமிழக ஆளுநர் பரப்பி வருவதும், திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்பது போல சொல்வதும் சரியானது இல்லை.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கையை துரிதமாக தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருக்கும் பட்சத்தில் அரசிடமோ, உள்துறையிடமோ அல்லது பிரதமர், குடியரசுத்தலைவரை சந்தித்து தெரிவிக்காமல் நான்காம் தர அரசியலை ஆளுநர் செய்து வருகிறார்.
சட்டத்திற்கு புறம்பாக பேசி நான்காம் தர அரசியல் செய்ய வேண்டாம். இந்தியாவில் மக்களாட்சி தத்துவம் தான் சிறந்தது. மக்களாட்சி தான் நடைபெற்று வருகிறது. நாட்டில் ஓபிசிக்கு கொடுக்கக்கூடிய மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது திராவிட அரசுதான். தமிழகத்தில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications