மத்திய பட்ஜெட்: ஓஹோவென புகழ்ந்த ஆளுநர் ரவி! அண்ணாமலையோடு போட்டியா என கிண்டலடித்த சு.வெங்கடேசன்!
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொந்தளிப்பும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் எந்த ஒரு திட்டத்துக்குமே மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியோ, மத்திய பட்ஜெட்டை பாராட்டியுள்ளார். இதனால் கொந்தளித்த சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன், "அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர். என்.ரவி" என விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை லோக்சபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு மட்டும் சிறப்பு நிதி உதவி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இது பிற மாநிலங்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற ஒரே ஒரு வார்த்தை கூட இம்முறை இடம் பெறவில்லை. மத்திய அரசின் இந்த வஞ்சகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு ஆளுநர் ரவி வரவேற்றுள்ளார். பட்ஜெட் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து: வறியநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிதிநிலை அறிக்கையை வழங்கிய பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு
அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த முன்னோக்கு நிதிநிலை அறிக்கை, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளிப்பதுடன், மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதற்காகவும் இந்த பட்ஜெட்டை குறிப்பாகப் பாராட்டுகிறோம்.
2047-ம் ஆண்டுக்குள் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் நிலையான தன்னிறைவு பாரதத்தை வளர்த்து, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர். என்.ரவி. தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை "முன்னோக்கு நிதிநிலை அறிக்கை" என்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர்.
ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல . இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி விமர்சித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications