நாட்டை துண்டாடும் திராவிட சித்தாந்தம்-கச்சத்தீவு தாரைவார்ப்பால் மீனவர்கள் படுகொலை- ஆர்.என்.ரவி சாடல்!
சென்னை: இந்தியாவை துண்டாட விரும்புவதுதான் திராவிட சித்தாந்தம்; 1947-ல் ஏற்பட்ட பிரிவினை முடிவுக்கு வரவில்லை. நிலம், மொழி அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். பிரிவினையை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிட சித்தாந்தமும் ஒன்று. இந்த தேசத்தை மதச்சார்பற்ற தேசமாக திராவிட சித்தாந்தம் ஏற்கவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மிகக் கடுமையாக விமர்சித்தார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நாடு விடுதலையின் போது 77 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிவினை கால கொடூரங்களை நினைத்துப் பார்க்கும் போது துன்பகரமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. மனிதர்களின் தவறுகளால் இந்தியா துண்டாடப்பட்டு பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவினையால் ஒன்றரை கோடி அப்பாவி பொதுமக்கள் அகதிகளாக்கப்பட்டனர். எத்தனையோ லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மை என்பது அனைவரும் சமம்தான் என்கிறது. ஆனால் இந்த நாட்டை 65 ஆண்டுகளாக ஆண்டவர்கள் இந்த சிந்தனையை உடைத்தனர்; மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினர்.
உலகில் வலிமை மிக்க ராணுவமாக நாம் திகழ்கிறோம். நமது நாட்டிடம் ஆயுதங்களை பிற நாடுகள் வாங்குகின்றன. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் முடிவு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இருக்கும் சிலர் நமது நாட்டு பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
1947-ல் ஏற்பட்ட பிரிவினையின் வடுக்கள் ஆறவில்லை. இந்த துயரம் இப்போதும் முடிவுக்கு வரவில்லை. பிரிவினையை ஆதரித்த சித்தாந்தங்களில் ஒன்றுதான் திராவிட சித்தாந்தம். இந்தியாவை துண்டாட விரும்புகிற சித்தாந்தம் திராவிடம். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்பதை ஏற்க மறுப்பதுதான் திராவிட சித்தாந்தம்.
தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட காரணமே கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததுதான். பள்ளிகள், கோவில்களில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகள் கவலை தருகின்றன. இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications