எக்கச்சக்க செலவு.. டீசலுக்கான வரியை உயர்த்த தமிழக அரசு ஆலோசனை? ஷாக் தகவல்.. பறந்த கண்டனம்!
சென்னை: மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்றத் திட்டங்களால் ஏற்படும் செலவை ஈடுகட்ட டீசலுக்கு, மத்திய அரசின் பாணியில் கூடுதல் வரி விதிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசிப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பெட்ரோல், டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.

அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5/-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4/-ம் குறைக்கப்படும்" என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 504-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வாக்குறுதி முக்கியமான வாக்குறுதி எனக் குறிப்பிடப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.
இதுபோன்ற வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாததோடு, நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகளையும் அரைகுறையாக, சம்பிரதாயத்திற்காக நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் லிட்டருக்கு 3 ரூபாய்தான் குறைத்தது. டீசல் விலையை குறைக்கவேயில்லை. அதே சமயத்தில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது.
வாக்குறுதியை நிறைவேற்றாத இந்தச் சூழ்நிலையில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்றத் திட்டங்களால் ஏற்படும் செலவை ஈடுகட்ட டீசலுக்கு, மத்திய அரசின் பாணியில் கூடுதல் வரி விதிப்பது குறித்து தமிழ்நாடு அரசின் நிதித் துறை அதிகாரிகள் வணிக வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ஏற்கெனவே, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு என மாநில அரசின் பல வரி உயர்வுகளால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், டீசல் மீதான கூடுதல் வரி என்பது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகுக்கும். 'பால் விலையை குறைக்கிறோம்' என்று சொல்லி, பால் மற்றும் பால் பொருட்களின் விலையை அதிகரித்ததோடு, குறிப்பிட்ட பால் மற்றும் பால் பொருட்களின் விநியோகத்தை குறைத்தது தி.மு.க. அரசு. இதே பாணியில், டீசல் விலையை உயர்த்தி அனைத்துத் தரப்பு மக்களின் மீதும் கூடுதல் நிதிச் சுமையை சுமத்த தி.மு.க. அரசு முயற்சிக்கிறது. ருடக
மத்திய அரசு விதிக்கும் கூடுதல் வரியை எதிர்க்கும் தி.மு.க., மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென்று கோருகின்ற தி.மு.க., தற்போது தமிழ்நாட்டில் டீசல் மீதான கூடுதல் வரியை உயர்த்துவது எந்தவிதத்தில் நியாயம்? தி.மு.க. அரசின் இதுபோன்ற நடவடிக்கை சாமானிய மக்களை வெகுவாக பாதிப்பதோடு, ஒவ்வொரு குடும்பத்தின்மீதும் குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாய் அளவுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும். தி.மு.க. அரசின் இந்த முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற வரி விதிப்பு தி.மு.க. ஆட்சியை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications