மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா.. இன்று இரவு அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ சங்கங்களுடன் தலைமை செயலகத்தில் இன்று இரவு 9.30 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலுயுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடந்த வெள்ளிக்கிமை (அக்.25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

Tamil Nadu Govt Doctors strikes: health Minister Vijayabaskar talks tonight with Govt Doctors Association

குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் மருத்துவர்களால் நோயாளிகளை கவனிக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். பயிற்சி மருத்துவர்களை கொண்டு அரசு சமாளித்து வந்த நிலையில் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக அவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள்.

இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவ சங்கங்களுடன் இன்று (அக்.,29) இரவு 9.30 மணியளவில் தலைமை செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+