மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநர் ரவி.. உச்ச நீதிமன்றத்திற்கே போன தமிழ்நாடு அரசு.. அதிரடி வழக்கு
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக வழக்கு தொடுத்துள்ளது. ஆளுநருக்கு உடனே உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்ட சபை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளது.. இதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200 வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.
மசோதா நிலுவை: கிட்டத்தட்ட 20 சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 2020 ஜனவரி 13, 18-ம் தேதிகளில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளன.
மசோதா நிலுவை: 2022 ஜனவரி 12ஆம் தேதி அனுப்பப்பட்ட, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா நிலுவையில் உள்ளது. ஏப். 28-ல் நிறைவேற்றப்பட்ட, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, மே 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மே 12-ல் நிறைவேற்றப்பட்ட மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளன.
மே 16ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்திவைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவை நிலுவையில் உள்ளன.
வழக்கு: இப்படி ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக வழக்கு தொடுத்துள்ளது. ஆளுநருக்கு உடனே உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.விரைவில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புகள் உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications