பிறப்பு இறப்பு பதிவு.. தாமதம் ஆகிவிட்டதா? தமிழக அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை: ஓராண்டுக்கும் மேல் தாமதமாகும் பிறப்பு, இறப்பை பதிவு செய்ய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள தகவல்களை இப்போது பார்க்கலாம்.
பிறந்த சில வாரங்களுக்குள்ளாகவோ அல்லது இறந்த சில வாரங்களுக்கு உள்ளாகவே பிறப்பு இறப்பு சான்றிதழ்களை நாம் வாங்கியாகவே வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு பெரும் சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. அப்படியான சூழல்களில் ஓராண்டுக்கும் மேல் தாமதமாகும் பிறப்பு, இறப்பை பதிவு செய்ய மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன என்பதை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: "பிறப்பு மற்றும் இறப்புக்கான பதிவை தாமதமாக செய்தால், அதற்காக கோர்ட்டின் மூலம் உத்தரவு பெற வேண்டியதிருந்தது. இந்நிலையில் வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில், 2017-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதிக்கு பின்பு கோர்ட்டு மூலம் பெறப்படும் ஆணைகள் செல்லாது என்று ஐகோர்ட்டு கூறியிருந்தது.
அதன்படி அந்த தேதிக்கு பின்பு வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) மூலமாக பிறப்பு மற்றும் இறப்புக்கான பதிவை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? : அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, பிறப்பு, இறப்பு பதிவில் தாமதம் ஏற்பட்டிருந்தால், அதை குறிப்பிட்டு பிறப்பு, இறப்பு நடந்த பகுதிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
2017-ம் ஆண்டுக்கு முன்பு பெற்ற கோர்ட்டு உத்தரவுடன் பதிவுக்காக விண்ணப்பதாரர் வந்தால், பதிவுக்கான உத்தரவை எந்தவித விசாரணையும் இல்லாமல் வருவாய் கோட்டாட்சியர் பிறப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பத்துடன், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இல்லாததற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் பெற்று இணைக்க வேண்டும். கிராம ஊராட்சியில் தாசில்தார் அல்லது கிராம நிர்வாக அலுவலர் (வி.எ.ஓ), பேரூராட்சியில் செயல் அலுவலர், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் ஆணையர், கன்டோன்மென்ட் பகுதியாக இருந்தால் செயல் அலுவலரிடம் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
இணைக்க வேண்டியது என்னென்ன? வயது குறிப்பிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பள்ளி ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட பள்ளி ஆவண பதிவுகள் ஆகிய துணை ஆவணங்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கலாம். இந்த ஆவணங்கள் இல்லாவிட்டால், பிறந்த ஆஸ்பத்திரியின் ஆவணங்களையோ அல்லது வீட்டில் பிறந்திருந்தால், அந்த வீட்டின் குடும்ப தலைவருக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் உறவினர்களில் ஒருவர்களிடம் இருந்து எழுத்து வடிவ கடிதத்தையோ பெற்று இணைக்க வேண்டும்.
இறப்பு பதிவுக்காக, இறந்தவர் மற்றும் அவரது துணையின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றுடன் மயானத்தில் பெறப்பட்ட அறிக்கை; ஆஸ்பத்திரியில் இறந்திருந்தால் அங்கு பெறப்பட்ட அறிக்கை, கொலை, தற்கொலை போன்ற அகால மரணம் நேரிட்டு இருந்தால் எப்.ஐ.ஆர். மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை; வீட்டில் இறந்திருந்தால், அருகில் வசிக்கும் உறவினரின் கடிதம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
உண்மைத்தன்மையை ஆய்வு செய்வார்கள்: கோட்டாட்சியர் இந்த விவரங்களை ஆய்வு செய்து, கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி 2 வாரங்களுக்குள் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை அளித்த பிறகு, இந்த விவரங்களை உள்ளூர் செய்தித்தாளில் வெளியிடச் செய்து, ஆட்சேபனைகளை அறியலாம்.
கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவல்களை பெற்று, திருப்தியிருந்தால் 60 நாட்களுக்குள் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதற்காக தாமத கட்டணமாக ரூ.500 வசூலிக்க பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். சான்றிதழ்களில் தவறு இருந்தால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications