Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் ஸ்டாலினின் தீபாவளி பரிசு..மாதம் ரூ.8000 தரும் தமிழக அரசு! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் 7500 உதவித்தொகை மற்றும் மருத்துவ படி 500 ரூபாய் என மொத்தம் 8000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் 17.11.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என மொத்தம் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்பெறுகிறது.

Tamil Nadu Govt chennai tamil

தமிழ்நாடு அரசு திட்டம்

தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் வாழ்விணையர் /திருமணமாகாத மகள் / விதவை மகளுக்கு. அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது.

தமிழறிஞர் உதவித்தொகை

2025-2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் 16.04.2025 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. "தமிழுக்கும் தமிழ் மறுமலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்பொழுது, ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 150-ஆக உயர்த்தப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 48 இலட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்."

மாதம் ₹8000 உதவி

மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு. உதவித்தொகை கை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையினை 100-இலிருந்து 150 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வாணையின்படி அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2025-2026ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் (tamilvalarchithurai.org/agavai/) என்ற வலைதளம் வாயிலாகவும் மூல விண்ணப்பம் நேரிலும் வரவேற்கப்படுகின்றன. 'மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது'.

விண்ணப்பிக்கத் தகுதிகள்

விண்ணப்பிக்கத் தகுதிகள்: 1) 01.01.2025ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 2) ஆண்டு வருவாய் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்படவேண்டும்), 3)தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு. 4) தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 5) ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.

தமிழ் வளர்ச்சி

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மண்டில / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/ உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். தமிழ் வளர்ச்சித் துறையின் (www.tamilvalarchithurai.tn.gov.in) செய்யப்பட்ட மூல விண்ணப்பத்தை நேரிலும் tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாகவும் விண்ணப்பம் செய்வது கட்டாயமாகும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர்க் கூறியதுபோல், திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.7500/-ம் மருத்துவப்படி 5.500/- அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

விண்ணப்ப இறுதி தேதி

படிவத்தில் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டில. மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக மட்டுமே அனுப்பப்பெற வேண்டும். சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்களை இயக்குநர். தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008. என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம். நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் 17.11.2025ஆம் நாளுக்குள் அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களுக்கு வந்து சேர வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+