பொங்கல் பரிசு ரூ.1000.. டோக்கன் விநியோகம் நாளை தொடக்கம்.. எங்கே வாங்க வேண்டும்? யாருக்கு கிடைக்காது
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இவை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படும்.

கடந்தாண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை மற்றும் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.
முதலில் பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அப்போதே கூறப்பட்டு இருந்தது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதேபோல இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முதலில் பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் ரொக்கம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையே பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ரேஷ,ன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யப்படும்.. அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பயனாளிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெறலாம்.
சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோருக்கும் இந்த பொங்கல் டோக்கன் வழங்கப்படாது என்பதைத் தமிழ்நாடு அரசு நேற்றே அறிவித்து இருந்தது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? 21 மாத கோடிக்கணக்கான நிலுவை தொகையில் தமிழக அரசு முடிவு? -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு












Click it and Unblock the Notifications