சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திண்டுக்கல் பரபர- ஒன்றியத்தை உரத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்! தேசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு தேசிய உணர்வின் உறைவிடமாக எப்போதும் உள்ளது; ஒருவரோடு ஒருவருக்கான அன்பும், மரியாதையும் நமது ஒற்றுமையின் அடிப்படை என பிரதமர் மோடி கூறினார்.

திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் பிரதமர் என குறிப்பிட்டார். அதேபோல் மத்திய அரசு என்பதை பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என கூறினார். அத்துடன் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அங்கேயே காத்திருந்த 'தலை’கள்.. 'டாட்டா’ காட்டிய மோடி.. போச்சே! மீண்டும் முட்டி மோதும் ஓபிஎஸ் ஈபிஎஸ்! அங்கேயே காத்திருந்த 'தலை’கள்.. 'டாட்டா’ காட்டிய மோடி.. போச்சே! மீண்டும் முட்டி மோதும் ஓபிஎஸ் ஈபிஎஸ்!

காதி உற்பத்தி

காதி உற்பத்தி

காந்திய வழியிலான வாழ்க்கையை மாணவர்கள் மேற்கொள்வது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான மிகப் பெரிய வாய்ப்பு. மகாத்மா காந்தியின் இதயத்திற்கு நெருக்கமான சிந்தனைகளுக்காக பணியாற்றுவது அவருக்கு செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலி. நீண்டகாலமாக மறக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட காதி ஆடையை மீட்டுள்ளோம். கடந்த ஆண்டு காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் ரூ.1 லட்சம் கோடிக்கு விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது. இப்போது அதன் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மைகள் காரணமாக உலகளாவிய ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கூட காதியை எடுத்துக் கொள்கின்றன. காதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு பெருமளவிலான உற்பத்தியின் புரட்சி மட்டுமல்ல பெருந்திரள் மக்களாலான உற்பத்தியின் புரட்சியும் ஆகும். கிராமங்களின் தற்சார்புக்கான ஒரு கருவியாக காதியை மகாத்மா காந்தி பார்த்தார். சுதேசி இயக்கத்தின் முக்கிய மையமாக தமிழ்நாடு இருந்துள்ளது. தற்சார்பு இந்தியாவில் அது மீண்டும் முக்கிய பங்காற்றும்.

ஊரக மேம்பாடு

ஊரக மேம்பாடு

ஊரக வளர்ச்சியில் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்வது அவசியம். கிராம வாழ்க்கையின் மாண்புகளை முன்னேற்றத்தில் அவை பாதுகாக்க வேண்டும். ஊரக மேம்பாட்டை நோக்கிய அரசின் தொலைநோக்குப் பார்வை என்பது மகாத்மா காந்தியின் சிந்தனைகளிலிருந்து பெற்ற ஊக்கமாகும். பாகுபாடு இல்லாத காலம் வரை நகரம் மற்றும் ஊரக பகுதிகளுக்கு இடையேயான வேறுபாடு ஏற்கத்தக்கது . முழுமையான ஊரக துப்புரவு, 6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர், 2.5 கோடி மின்சார இணைப்புகள், சாலைகள் மூலம் ஊரக போக்குவரத்துத் தொடர்பு அதிகரிப்பு ஆகியவற்றை உதாரணங்களாக பார்க்கலாம். சுமார் 2 லட்சம் கிராமப்பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு 6 கிலோமீட்டர் தொலைவிற்கு கண்ணாடி இழை கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை

நீடித்த வேளாண்மை என்பது கிராமப்பகுதிகளின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. நமது இயற்கை வேளாண்மைத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மை தொடர்பான கொள்கையை அரசு கொண்டு வந்துள்ளது. ஒரே வகையான பயிர் செய்தல் என்பதிலிருந்து வேளாண் துறையை பாதுகாக்க வேண்டிய காலம் வந்துள்ளது. தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் இதரப் பயிர்களின் உள்ளூர் வகைகளை மீட்க வேண்டும்.

தேசிய உணர்வின் உறைவிடம் தமிழ்நாடு

தேசிய உணர்வின் உறைவிடம் தமிழ்நாடு

ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவுக்காக மகாத்மா காந்தி போராடினார். காந்தி கிராம் என்பதே இந்திய ஒற்றுமையின் சின்னம். தமிழ்நாடு தேசிய உணர்வின் உறைவிடமாக எப்போதும் உள்ளது. சுவாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பிபோது அவருக்கு ஒரு நாயகருக்கான வரவேற்பு அளிக்கப்பட்டது.மறைந்த ஜெனரல் பிபின் ராவத் மறைவின் போது'வீரவணக்கம்' என்ற முழக்கங்கள் கேட்டன. காசியில் காசி தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது. இது காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவைக் கொண்டாடும். இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதன் செயல்வடிவமாகும். ஒருவரோடு ஒருவருக்கான அன்பும், மரியாதையும் நமது ஒற்றுமையின் அடிப்படை.

ராணி வேலுநாச்சியார்

ராணி வேலுநாச்சியார்

பிரிட்டிஷாரை எதிர்த்த போரின் தயார் நிலைக்காக ராணி வேலுநாச்சியார் திண்டுக்கல்லில் தங்கியிருந்தார். மகளிர் சக்தியின் ஆற்றலை காணுகின்ற பகுதியில் இன்று நான் இருக்கின்றேன். இங்கு பட்டம் பெறும் இளம் பெண்களை, மாபெரும் மாற்றங்களை செய்பவர்களாக நான் காண்கிறேன். கிராமப்புற பெண்கள் வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும். அவர்களின் வெற்றி தேசத்தின் வெற்றியாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

English summary
Prime Minsiter Narendra Modi said that Tamil Nadu has always been the home of national consciousness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X