காப்பீடு திட்டங்களை திறம்பட செயல்படுத்திய தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்! விருது வழங்கிய மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டத்தை திறம்பட செயல்படுத்தி நிதியை முறையாக கையாண்டதற்காக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பான விவரம் வருமாறு;

ஆயுஷ்மான் பாரத்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 23.07.2009 முதல் 19.09.2023 வரை 1,31,86,958 பயனாளிகள் 12,219 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 27,97,258 பயனாளிகளுக்கு ரூ. 4,385 கோடி காப்பீட்டு செலவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தில் 23.09.2018 முதல் 19.09.2023 வரை 17,22,512 பயனாளிகள் 2,594 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Health Department officials have effectively implemented insurance plans! Award given by Union Govt

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: இத்திட்டத்தின் முக்கிய சிறப்பு அம்சமாக அதிக செலவாகும் 8 உயர் சிறப்பு சிகிச்சைகளான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை , எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காதுவால் நரம்பு உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செவிப்புல மூளை தண்டு உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தேவைப்படும் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

24 மாநிலங்கள்: ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டத்தில் சிறந்த சேவை புரிந்தமைக்கான 24 மாநிலங்களிலிருந்து 70 கருத்துருக்கள் பெறப்பட்டதில், 5 கருத்துருக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் அரசு நிதியை திறம்பட செயல்படுத்தி சேவை புரிந்தமைக்காக தமிழ்நாட்டிற்கு விருது வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.

Tamil Nadu Health Department officials have effectively implemented insurance plans! Award given by Union Govt

கோவிந்த ராவ் ஐ.ஏ.எஸ். : சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை திட்ட இயக்குநர் கோவிந்த ராவ், எஸ்.ரவிபாபு , ஆகியோருக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விருது வழங்கி பெருமைப்படுத்தினார்.

அரசு மருத்துமனைகள்: 2023 ஆம் ஆண்டு ரூ.723 கோடியில் 50 விழுக்காடு காப்பீட்டு தொகை ரூ.361.00 கோடி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட இத்திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகமாக காப்பீட்டுத் தொகை ஈட்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் காப்புறுதி தொகையினை, அரசு மருத்துமனைகளின் உள்கட்டமைப்புகளுக்கும், நுகர்பொருட்கள் கொள்முதல் மற்றும் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் செலவிடப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+