மூளையை திண்ணும் அமீபா! சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்! தமிழக அரசு
சென்னை: சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் யாரும் மூளையை உண்ணும் அமீபா குறித்து அச்சப்பட தேவையில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த அமீபா கொரோனா போல் மற்றவர்களுக்கு பரவாது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை, வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் பரவும் நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்.சபரிமலை சென்று வந்து 3 நாட்களுக்கு பின் காய்ச்சல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

ஆறுகள், குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கும் போது மூக்கினுள் நீர் செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். கொதிக்க வைத்த நீரை பருகவும்.மலை ஏறும் போது மெதுவாக இடைவெளி விட்டு ஏறவும். கொரோனா தொற்று போல அமீபா பரவாது என்பதால் சபரிமலை செல்வோர் அச்சப்பட தேவையில்லை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் 1ஆம் தேதி இன்று பிறந்துள்ளதால், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று மண்டல பூஜை தொடங்கியது. இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கேரள மாநில சுகாதாரத் துறை சில அறிவுரைகளை வழங்கியது.
அதில் சபரிமலைக்கு வரும் வழியில் ஆறுகளில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே உள்ள உடல்நல பிரச்சினைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்வோர் அவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள், மருந்துகளுடன் பயணிப்பது அவசியம். சபரிமலை யாத்திரை புறப்படும் முன்னர், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

மலை ஏறும் போது மெதுவாக ஏறவும். அது போல் இடைவெளி விட்டு செல்லுங்கள். ஒருவர் பின்னால் ஒருவர் நெருக்கமாக செல்வதை தவிருங்கள். வெந்நீரையே குடியுங்கள். உணவு மட்டுமல்லாமல் எந்த தின்பண்டங்களை சாப்பிடுவதாக இருந்தாலும் அதற்கு முன்னர், கைகளை கழுவ வேண்டும்.
அது போல் குளிப்பதற்கு பயன்படுத்தும் துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்க தடை உள்ளதால் பக்தர்கள் சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைகளில் பாம்புக் கடிக்கான விஷ முறிவு மருந்துகள் உள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications