சொத்துக்கள் வாங்கி பத்திரப்பதிவு.. தமிழக பதிவுத்துறை சக்சஸ்.. ஒரே நாளில் இத்தனை கோடியா? செம வருவாய்
சென்னை: அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறையில் முதன்மையானதும், முக்கியமானதும் பத்திரப்பதிவு துறையாகும்.. அந்தவகையில், மீண்டும், ஒரே நாளில் மிகப்பெரும் வசூலிட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலானோர், புதிதாக ஒரு வீடு, நிலம் வாங்கும்போதும், அதற்கான பத்திரப்பதிவு செய்யும்போதும் நல்ல நேரம், சுபமுகூர்த்த நாட்களை பார்ப்பது வழக்கமாகும். முக்கியமாக, சுபமுகூர்த்த தினத்துக்காக பத்திரப்பதிவு கூட செய்யாமல் எத்தனையோ பேர் காத்திருக்க செய்கிறார்கள்.

பத்திரப்பதிவு: அதுமட்டுமல்லாமல், சுபமுகூர்த்த தினத்தில் ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் பத்திரப்பதிவு செய்ய முயலும்போது கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால், பத்திரப்பதிவு செய்ய முடியாமலும் போகும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே, குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக பத்திரவுப்பதிவுக்கான டோக்கன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சுமார் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வரும்நிலையில், முகூர்த்த நாட்களில் அதிக அளவு பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் அந்த நாட்களில் அதிக அளவிலான டோக்கன் வழங்கப்படுகின்றன.
கூடுதல் வருவாய்: அந்தவகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமையும் மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டன.. இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் படுபிஸியாக காணப்பட்டன. காலையிலேயே ஏராளமானோர் சார் பதிவாளர் அலுவலகங்களில் குவிந்துவிட்டனர். இதனால், 238.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது..
இது தொடர்பாக பத்திரப்பதிவு துறை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ''2024-25ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15/- கோடி வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 31.1.2025 அன்று 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதே நிதியாண்டில் இரண்டாவது முறையாக அரசுக்கு ரூ.231.51/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஏமாற்றம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்த போதிலும், பல்வேறு மாவட்டங்களில் சில பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கவில்லையாம்.. அவை பூட்டியே கிடந்ததாகவும், இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு காரணம், தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவுத்துறையில் காலியாக உள்ள 60 சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறியிருந்தனர்.. இதனால், சில பத்திரப்பதிவு அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. எனவே, இது தொடர்பாக துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அரசுக்கு வருவாய்: பத்திரப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.. இதனால் கடந்த 9 மாதங்களில் மட்டும் 25 லட்சம் பேர் பத்திர பதிவு செய்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு ரூ.15,582 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications