இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்.. தமிழ்நாடு அரசே மாதம் மாதம் தரும் ரூ.7000.. எளிதாக பெறலாம்.. எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் நிதி வழங்கப்படும் திட்டம் இந்த ஆண்டு மீண்டும் தொடங்க உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான 2ம் ஆண்டு விண்ணப்பம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
யுபிஎஸ்சி சிஎஸ்இ 2026 தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் ஜனவரி 14, 2026 அன்று வெளியிடப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 3, 2026 ஆகும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் பிற பதவிகளுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்காக (சிஎஸ்இ) upsc.gov.in மற்றும் upsc.gov.in/examinations/exam-calendar ஆகிய இணையதளங்களில் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மே 2026-ல் நடைபெறவிருக்கும் முதல்நிலைத் தேர்வுக்காக, விண்ணப்பதாரர்கள் ஒருமுறைப் பதிவு (OTR) செய்து, பகுதி-I மற்றும் பகுதி-II படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதில் தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பம் செய்பவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற சிறப்பு வகுப்பு அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் நிதி வழங்கப்படும். 10 மாதங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும்.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். நேர் முக தேர்வில் வென்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்படி விண்ணப்பம் செய்வது
நீங்கள் UPSC தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
வருமான வரி சான்றிதழ் இருக்க வேண்டும். வருமானம் அரசின் நிர்ணயத்தை விட குறைவாக இருக்க வேண்டும்.
பெற்றோர் அல்லது கணவர் யாரும் அரசு வேலை, அரசு பென்ஷன் வாங்க கூடாது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படுவதற்கான தகுதி இருக்க வேண்டும்.
நீங்கள் வட்டாச்சியர் அலுவலகத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம். ஆட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை செய்ய முடியும்.
UPSC தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1, 2026 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது மற்றும் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கும் விண்ணப்பம் செய்ய முடியும்.
யுபிஎஸ்சி தேர்வு எழுதும் காலம், பயிற்சி காலம் என்று 10 மாதத்திற்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும்,
இப்போது யுபிஎஸ்சி சிஎஸ்இ 2026 தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் ஜனவரி 14, 2026 அன்று வெளியிடப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 3, 2026 ஆகும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் பிற பதவிகளுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்காக (சிஎஸ்இ) upsc.gov.in மற்றும் upsc.gov.in/examinations/exam-calendar ஆகிய இணையதளங்களில் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மே 2026-ல் நடைபெறவிருக்கும் முதல்நிலைத் தேர்வுக்காக, விண்ணப்பதாரர்கள் ஒருமுறைப் பதிவு (OTR) செய்து, பகுதி-I மற்றும் பகுதி-II படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும். இதனால் இந்த வருடம் விண்ணப்பிப்பவர்கள் தற்போது இந்த திட்டத்தில் பணம் பெற விண்ணப்பம் செய்யலாம்.
ஆனால் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் வழங்கப்படும்.
உங்கள் ஆதார் அட்டையில் விலாசம் தமிழ்நாடாக இருக்க வேண்டும்.
UPSC 2025 சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வு மே 25, 2025 அன்று நடைபெற்றது. UPSC 2025 சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 22, 2025 முதல் நடைபெற்றது. இதற்கு பயிற்சி பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் .












Click it and Unblock the Notifications