அடித்து தூக்கும் தமிழ்நாடு அரசு! முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு! ரெடியான டீம்.. குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இந்த வருடம் பிரம்மாண்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்றது.

மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.

முதலீடு

முதலீடு

இதன் காரணமாக 99 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மொத்தமாக 93 நிறுவனங்கள் முதலீடுகளையும், திட்டங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இன்று மேற்கொண்டு உள்ளன. இந்த முதலீடு செய்த நிறுவனங்கள் பல தங்கள் தொழில்களை ஏற்கனவே தொடங்கிவிட்டன. இன்னும் சில நிறுவனங்கள் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பணிகளை முடித்துவிட்டது. கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோவைக்கும், ஓசூருக்கும், சில தெற்கு மாவட்டங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உதாரணமாக கோவையில் டெக் மஹிந்திரா முறையாக தங்கள் கிளையை துவங்க உள்ளது. இதன் மூலம் அங்கு 1500 பேருக்கு வேலை கிடைக்கும். அதேபோல் ரோல்ஸ் ராய்ஸ், எச்ஏஎல் இணைந்து IAMPL என்று கூட்டு நிறுவனம் மூலம் விமான உதிரி பாகங்களை செய்ய உள்ளன.

2022 மாநாடு

2022 மாநாடு

இந்த நிறுவனம் ஓசூரில் தொடங்கப்பட உள்ளது. எல் அண்ட் டி மூலம் 1500 கோடி ரூபாய்க்கு கோவையில் புதிய ஐடி பார்க்க தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த டிரோன் நிறுவனமான கருடா நிறுவனம் 23 கோடி ரூபாய்க்கு தனது கிளையை கோவையில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் MWIVEN என்ற நிறுவனம் ஏவுகணை தயாரிப்பு உதிரி பாகங்களை உருவாக்கும் நிறுவனத்தை ஓசூரில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில்தான் இந்த வருடமும் தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

முதலீடு

முதலீடு

கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை கண்காணிக்க, முதலீடுகளை ஊக்குவிக்க The Guidance Bureau என்ற பிரிவு அரசு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. முதலீடுகளை கண்காணிக்க, ஊக்குவிக்க, அனுமதி அளிக்க, ஈர்க்க உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை பிரிவாக இந்த The Guidance Bureau செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாகவே 2022ம் வருடம் முழுக்க தமிழ்நாடு மொத்தமாக 60+ நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. மொத்தமாக இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் இந்த முதலீடுகளை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாடு இந்த வருடம் பிரம்மாண்டமாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 2023 இறுதியில் நடத்தப்பட இருந்த இந்த மாநாடு முன்கூட்டியே நடக்கும் என்று கூறப்படுகிறது.

முன்கூட்டியே மாநாடு

முன்கூட்டியே மாநாடு

சென்னை அல்லது கோவையில் இந்த மாநாட்டை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று சென்னையில் ஸ்டார்ட் அப் மாநாடு நடந்து வருகிறது. இதில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில்தான் இன்னும் சில மாதங்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்த மாநாட்டை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் அடங்கிய அணியை களமிறக்கி இதற்கான பணிகளை தொடங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+