தமிழ்நாட்டிற்கு வருகிறது கூகுள்.. மிகப்பெரிய முதலீட்டை செய்ய முடிவு.. தட்டி தூக்கிய அரசு? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியாக உள்ளது. கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்குவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட உள்ளது.

சென்னையில் அடுத்த வருடம் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. ஜனவரியில் மிகப்பெரிய அளவில் இந்த மாநாடு நடக்க உள்ளது. பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பிரம்மாண்ட மாநாடு நடக்க உள்ளது.

Tamil Nadu Investment Google: The search Engine company to start a major office in Chennai

தமிழ்நாட்டில் கடந்த 2 வருடமாக முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக ஐடி துறையில் சுணங்கி இருந்த தமிழ்நாடு வேகமாக பல்வேறு முதலீடுகளை பெற்று வருகின்றன. அதேபோல் தொழிற்துறையிலும் பல அதிரடி சாதனைகளை தமிழ்நாடு அரசு நிகழ்த்தி வருகிறது.

ஆட்டோமொபைல்: தமிழ்நாடு எப்போதும் ஆட்டோமொபைல் துறையில் கில்லிதான். அதன்படியே இந்த முறையும் தமிழ்நாடு தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் முதலீடுகளை பெற்று வருகிறது. உதாரணமாக நிசான் தொடங்கி ஹூண்டாய் வரை பல நிறுவனங்கள் மீண்டும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன.

தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்டு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செய்யாறு அருகே 60 ஏக்கர் பரப்பில் தனது முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கிறது. 2025ம் ஆண்டு முதல் இந்த புதிய ஆலையில் இருந்து வாகனங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி ( MITSUBISHI ELECTRIC ) நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.

அதேபோல் இவி துறையில் முதலீடுகளை இந்தியா அதிகம் பெற்று வருகிறது. இந்தியாவின் இவி தொழிற்சாலை தலைமையிடமாக ஏற்கனவே ஓசூர் உயர்ந்து விட்டது. அந்த அளவிற்கு ஓசூரை நோக்கி இவி முதலீடுகள் குவிந்து வருகின்றன. உலகின் மிகப்பெரிய இவி பைக் தொழிற்சாலையான ஓலா தொழிற்சாலை இங்கேதான் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்கள் மாநாடு: இந்த நிலையில்தான் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியாக உள்ளது. கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்குவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட உள்ளது.

சமீபத்தில் தமிழக அரசின் பிரதிநிதிகள் குழு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் சிங்கப்பூரில் உள்ள கூகுளின் ஆசிய பசிபிக் தலைமையகத்திற்குச் சென்று ஆலோசனை செய்தனர். கூகுள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சாத்தியமான ஒப்பந்தங்கள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்தனர்.

தமிழ்நாட்டிற்கு கூகுள் நிறுவனத்தை கொண்டு வரும் விதமாக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு கூகுள் போன்ற நிறுவனத்தை கொண்டு வர வேண்டும் என்பது பல கால கனவு. அது தற்போது நிறைவேறுவதற்கான சாத்திய கூறுகள் தெரிய தொடங்கி உள்ளன. தெற்கு ஆசியாவில் சீனாவிற்கு பதிலாக இந்தியா பக்கம் பார்வையை திருப்பும் கூகுளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் பட்சத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலம் மொத்தமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஆலோசனை வெற்றிகரமாக நடைபெற்றதன் காரணமாக தமிழ்நாட்டை நோக்கி பெரும்பாலும் கூகுள் நிறுவனம் வரும் ஜனவரி மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+