தமிழ்நாடுதான் நம்பர் ஒன்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ்.. வியந்து பார்க்கும் மாநிலங்கள்!

தமிழ்நாட்டுப் பெண்கள் அதிக பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றும் பெண்கள் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முக்கியமான இடத்தில் உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களின் சமூகப் பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம்; அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் அதிக பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றும் பெண்கள் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முக்கியமான இடத்தில் உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கல்வியில், பொருளாதாரத்தில், சமூகத்தில், அரசியலில், அதிகாரத்தில், தொழில்களில் பல்வேறு சாதனைகளை செய்து பெண்கள் மிக உயர்ந்த நிலையை அடைந்து வருகிறார்கள்.

அதேநேரம் பெண்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்படும் சூழல் இந்தியாவில் இன்னமும் பல மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்களில் காணப்படுகிறது. அதேநேரம் தென்மாநிலங்களில் பெண்கள் கல்வி அதிக அளவு ஊக்குவிக்கப்படுகிறது. பெண்கள் கல்வி கற்பது தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதேபோல் தொழில் தொடங்குவது, தொழிலை வெற்றிகரமாக நடத்துவது,அதற்காக கடன் வாங்குவது என பெண்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவருகிறார்கள்.

என்ன செய்தி

என்ன செய்தி

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக பெண்கள் கடன் வாங்குவது குறித்து ஒரு பிரபல நாளிதழியின் செய்தியை பகிர்ந்துள்ளார். அந்த செய்தியில் கிரிப் ஹைமார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் என்ற பெயரில் இந்தியாவில் அதிகம் கடன் வாங்கும் பெண்கள் உள்ள டாப் 5 மாநிலம் என்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

அந்த பட்டியலில் பெண்கள் வீட்டுக்கடன் அதிக வாங்கும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் உள்ளபடி, மகாராஷ்டிரா- 218000. கர்நாடகா -99679, தமிழ்நாடு 92841, தெலுங்கானா 75837 ஆகிய பெண்கள் கடன் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. வணிககடன் வாங்கிய மாநிலங்களில் மாகராஷ்டிரா 47225 பேரும் முதல் இடத்திலும், தமிழ்நாடு 41700 பேருடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகா 25890 பேருடன் மூன்றாவது இடத்திலும், குஜராத் 22692 பேருடன் 4வது இடத்திலும், உத்தரப்பிரதேசம் 20252 பேருடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

தமிழ்நாடு முதலிடம்

தமிழ்நாடு முதலிடம்

பெண்கள் தனிநபர் கடன் பட்டியலில், தமிழ்நாடு 22247 பேருடன் முதல் இடத்திலும், மகாராஷ்டிரா 20988 பேருடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகா 17795 பேருடன் 3வது இடத்திலும், தெலுங்கானா 15454 பேருடன் 4வது இடத்திலும், ஆந்திரா 12837 பேருடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இவை அனைத்துமே பெண்கள் கடன் வாங்குபவர்களின் பட்டில் ஆகும்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

சொத்துக்கடன் அதிகமாக வாங்கும் பெண்கள் பட்டியலில் மகாராஷ்டிரா 40477 பேருடன் முதல் இடத்திலும், தமிழ்நாடு 28461 பேருடன் இரண்டாம் இடத்திலும் கர்நாடகா 24357 பேருடன் 3வது இடத்திலும்,குஜராத் 19279 பேருடன் நான்காவது இடத்திலும், தெலுங்கானா 15732 பேருடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், கூறியுள்ளதாவது: ஊடகங்களில் ஒரு செய்தி! தலைப்பைப் பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம்; உண்மையில் அது நேர்மறையானதே வீடு - வணிகம் - சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காகக் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்பதுதான் அந்தச் செய்தி. பெண்களின் சமூகப் பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம்; அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் அந்தச் செய்தி, 2023 மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான செய்தி! " என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+