சொல்லி அடித்த ஸ்டாலின்.. "வாஷ் அவுட்".. 21க்கு 21ஐயும் அள்ளுகிறது திமுக! மாநகராட்சிகளில் மாஸ் வெற்றி
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை வெளியான முன்னணி நிலவரங்கள், வெற்றி நிலவரங்களின்படி திமுகதான் அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. கடந்த சனிக்கிழமை நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வரும் மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.
இதுவரை மாநகராட்சி முடிவுகளின் படி பார்த்தால் 21 மாநகராட்சிகளில் பெரும்பாலான மாநகராட்சியில் திமுகதான் முன்னிலை வகிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் 21 மாநகராட்சிகளில் 21லும் வெல்லுவோம் என்று அறிவித்து இருந்தார்.

சென்னை
அதன்படியே தற்போது 21 மாநகராட்சிகளில் திமுகதான் 21 மாநகராட்சிகளிலும் முன்னிலை வகிக்கிறது. முக்கியமாக சென்னை மற்றும் கொங்கு மண்டல மாநகராட்சியை திமுக கைப்பற்றும் நிலை உள்ளது. இதுவரை எந்த மாநகராட்சியிலும் திமுக தவிர வேறு எந்த கட்சியும் முன்னிலை பெறவில்லை. சிவகாசியில் முன்னிலை வகித்த அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் திமுக 67 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 9 வார்டிலும் முன்னிலை வகிக்கிறது.

மதுரை
மதுரையில் உள்ள 100 வார்டுகளில் திமுக 42 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 9 வார்டில் முன்னிலை வகிக்கிறது. கோவையில் உள்ள 100 வார்டுகளில் திமுக 31 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. திருச்சி உள்ள 65 வார்டுகளில் திமுக 33 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது.

சேலம்
சேலத்தில் உள்ள 60 வார்டுகளில் திமுக 21 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டில் முன்னிலை வகிக்கிறது. திருப்பூரில் உள்ள 60 வார்டுகளில் திமுக 13 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 7 வார்டில் முன்னிலை வகிக்கிறது. திண்டுக்கல்லில் உள்ள 48 வார்டுகளில் திமுக 34 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 4 வார்டில் முன்னிலை வகிக்கிறது.

தூத்துக்குடி
ஈரோட்டில் உள்ள 60 வார்டுகளில் திமுக 23 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 3 வார்டில் முன்னிலை வகிக்கிறது. வேலூரில் உள்ள 60 வார்டுகளில் திமுக 14 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 4 வார்டில் முன்னிலை வகிக்கிறது. தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளில் திமுக 50 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 6 வார்டில் முன்னிலை வகிக்கிறது.

தஞ்சாவூர்
தஞ்சாவூரில் உள்ள 51 வார்டுகளில் திமுக 15 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக எந்த வார்டிலும் முன்னிலை வகிக்கவில்லை நெல்லையில் உள்ள 55 வார்டுகளில் திமுக 5 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. ஓசூரில் உள்ள 45 வார்டுகளில் திமுக 5 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது.

காஞ்சிபுரம்
நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் திமுக 20 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டில் முன்னிலை வகிக்கிறது. ஆவடியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 18 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. காஞ்சிபுரம் உள்ள 50 வார்டுகளில் திமுக 16 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டில் முன்னிலை வகிக்கிறது.

சிவகாசி
கரூரில் உள்ள 48 வார்டுகளில் திமுக 37 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டில் முன்னிலை வகிக்கவில்லை. கடலூரில் உள்ள 45 வார்டுகளில் திமுக 22 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 5 வார்டில் முன்னிலை வகிக்கிறது . சிவகாசி உள்ள 48 வார்டுகளில் திமுக 25 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 11 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. சிவகாசியில் அதிமுக முன்னிலை வகித்து வந்த நிலையில் இப்போது பின்னடைவை சந்தித்துள்ளது.
Recommended Video

வேறு மாநகராட்சி
தாம்பரம் உள்ள 70 வார்டுகளில் திமுக 11 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. கும்பகோணம் உள்ள 48 வார்டுகளில் திமுக 24 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக எந்த வார்டிலும் முன்னிலை வகிக்கவில்லை. இதனால் மொத்தமாக 21 மாநகராட்சிகளிலும் திமுக கிளீன் வெற்றி பெறுகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications