விட்டுக்கொடுக்காத செவிலியர்கள்.. தீவிரமடையும் போராட்டம்! அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை
சென்னை: திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொல்லியது போல, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இந்நிலையில் போராட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று, செவிலியர் சங்கங்களுடன் அமைச்சர் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் நிலையில், போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

கிண்டி எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் போராட்டக்குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "கடந்த பதினெட்டாம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் செவிலியர் சங்கத்தினர் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று செவிலியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டத்தில் இருக்கிற நியாயமான அம்சங்களை பரிசீலனை செய்து, அவர்களுக்கான கோரிக்கைகளை செய்து தர வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்திருக்கிறார். அந்த வகையில் அவருடைய ஒரு கோரிக்கை என்பது, நிரந்தர பணியாளர்களைப் போலவே அனைத்து எம்ஆர்பி தொகுப்பு புதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது. இது சம்பந்தமான கருத்துரு அரசு பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. விரைவில் அது குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்த அரசு பொறுப்பேற்க்கிறபோது இந்த செவிலியர்களுக்கு ரூ.14,000 சம்பளம் இருந்தது. இவர்கள் எல்லாம் 2014-15 ஆம் ஆண்டுகளில் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலத்தில் தற்காலிக செவிலியர்களை எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
அரசு எம்ஆர்பியில் எடுக்கிற போது, 2 ஆண்டு காலம் அவர்கள் பணி செய்ததற்கு பிறகு ,அந்த செவிலியர் துறையில் காலி பணியிடம் உருவானால் சீனியாரிட்டி அடிப்படையில் அவர்களை பணியில் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. இதையெல்லாம் ஒப்புக்கொண்டுதான் 2014 இல் இவர்கள் பணியில் சேர்ந்திருந்தார்கள். தற்பொழுது 8,322 செவிலியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக புதிய பணியிடங்களை உருவாக்கி பணியை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோருகிறார்கள்.
முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் சொன்னதைப் போலவும், கொரோனா பேரிடர் காலத்தில் பெரிய அளவில் அரசுக்கு மட்டுமல்ல, பொதுமக்களின் உயிர் காத்த விவகாரத்தில் உதவியதற்காகவும், அவர்களுக்கு பெரிய அங்கீகாரம் என்கின்ற வகையில் ரூ.14,000 சம்பளத்தை ரூ.18,000 ஆக அரசு உயர்த்தியது. அதேபோல இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆண்டுதோறும் காலியாக செவிலியர்களையும் தவிர்த்து 1,200 செவிலியர்கள் முதலமைச்சர் அவர்களால் கடந்த ஆண்டு வரை கட்டி முடித்து திறந்து வைக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கி பணியமர்த்தப்பட்டார்கள்.
தற்போது காலியாக இருக்கிற 169 இடங்களுக்கு, புதியதாக 169 செவிலியர்களுக்கு உடனடியாக பணியானைகள் நிரந்தர ஆணைகளை தயார் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல 256 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் புதியதாக உருவாக்கியும், நர்சிங் பீட்டர் என 140 பணியிடங்கள் என மொத்தம் 723 பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருகுக்கின்றன. இந்த இடங்களுக்கு பொங்களுக்கு முன் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications