உஷார்.. தமிழகத்தில் 85% கொரோனாவுக்கு ஓமிக்ரான்தான் காரணம்.. அமைச்சர் மா.சு. வெளியிட்ட முக்கிய தகவல்
இப்போது வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் பாதிப்பு தான் ஒமிக்ரான் அறிகுறி தான் என்பதால் தனியாக ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஓமிக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவிகிதம் பேருக்கு ஓமிக்ரான் அறிகுறிதான் இருக்கிறது என்றும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா பரவிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து ஓமிக்ரான் வகை கொரோனா பரவத்தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரம் மட்டுமே இருந்தது. கடந்த 10 நாட்களுககு முன்பு வரை ஓமிக்ரான் பாதிப்பு 180 வரை மட்டுமே பதிவான நிலையில் இப்போது தினசரி பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 85 சதவிகிதம் பேருக்கு ஓமிக்ரான் அறிகுறிதான் தென்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

புதிய வைரஸ் பரவல்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் ஓமிக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் ஓமிக்ரான் அறிகுறிதான் இருக்கிறது என்று தெரிவித்தார். இப்போது வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் பாதிப்பு தான் ஒமிக்ரான் அறிகுறி தான் என்பதால் தனியாக ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை. புதிய வைரஸ் எல்லாம் பரவுகிறது என்று சொல்வதால் அதிக பாதிப்புள்ள கிளஸ்டர் ஏரியாக்களில் மட்டும் பாதிப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறினார்.

ஓமிக்ரான் அறிகுறி
தினசரி உறுதிப்படுத்தப்படும் தொற்றுகளின் எண்ணிக்கையில் 85 சதவிகிதம் எஸ் ஜீன் குறைபாடாகவும் மீதமுள்ள 15 சதவிகிதம் டெல்டா வகை கொரோனாவாகவும் இருக்கிறது. அந்தவகையில் எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டு எந்த ஒரு அறிகுறியும் இல்லாதவர்களை 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் வைத்து மாநகராட்சி கண்காணித்து வருகிறோம்.

ஓமிக்ரான் உயிரிப்பு இல்லை
60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், அதிக பாதிப்பு உடையவர்களை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டவர்களில் பலர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்று கூறிய அமைச்சர் சுப்ரமணியன், தமிழகத்தில் எஸ் ஜீன் குறைபாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
Recommended Video

அடுத்த தடுப்பூசி முகாம் எப்போது
பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் இந்த வாரம் மெகா தடுப்பூசியை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications