உற்சாகம்.. தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ்.. சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை - திருப்பலி
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சாந்தோம் சர்ச், நாகை வேளாங்கண்ணி உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் புத்தாடை அணிந்து கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். சர்ச்சுகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன.
இயேசு கிறிஸ்துவின் பிறந்ததை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் டிசம்பர் தொடக்கம் முதலே கிறிஸ்துமஸ் விழா களைகட்டிவிடும்.
இந்நிலையில் தான் 2023ம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸிஸ் தலைமையில் இன்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடந்தது. புனித பீட்டர் பேராலயத்தில் குழந்தை இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து போப் பிரான்சிஸ் சிறப்பு திருப்பலி வழங்கினார். உலகம் அமைதியாக இருக்க வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.
மேலும் தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது. சென்னை சாந்தோம் தேவாலயம், நாகை வேளாங்கண்ணி சர்ச் உள்பட தமிழகத்தின் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றுள்ளனர்.
மேலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். இங்குள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதுதவிர கோவை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சர்ச்களிலும் நள்ளிரவு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சர்ச்சகள் மற்றும் கிறிஸ்தவர்களி்ன வீடுகள் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஸ்டார்கள் ஒளிர செய்யப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சர்ச், வீடுகளில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் நள்ளிரவு ஜெபத்துக்கு முன்னதாக பல சர்ச்சுகளில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications