தமிழக அரசின் சூப்பர் முடிவு.. இந்த ஆவணம் இருந்தால் போதும்.. மாதமாதம் ரூ.1500.. உங்களை தேடி வரும்
சென்னை: ஆதரவற்ற திருநங்கைகளுக்கான மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தமிழக அரசு மூலம் தொடங்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுக்க 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். மாதம் ரூ.1,500 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டு உள்ளன:
40 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை.
ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்.
குடும்ப அட்டை வைத்திருத்தல் வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களாலோ (அ) வேறு எந்த நபர்களாலோ உதவி பெறாத திருநங்கையராக இருத்தல் வேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் - மாவட்ட சமூக நல அலுவலர்.
எப்படி பெறுவது
உடனே மாவட்ட சமூக நல அலுவலரை சந்தித்து இதற்கான ஆவணங்களை கொடுத்து வங்கி கணக்கில் மாதம் ரூ. 1500 பெற முடியும்.
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்
ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீண்டும் அளிக்கப்பட உள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டம் 2 மாதத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தமிழக பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் யார் எல்லாம் இதற்கு இனி விண்ணப்பிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். சாதாரணமாக புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் நேரடியாக இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் போன முறை நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பம் செய்பவர்கள்.. வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது
1. ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்பட்டது.
2. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் வாங்கினாலும் கிடைக்காது. ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின் போது பணம் தர கூடாது என்று முடிவு எடுக்கப்படும்.
3. கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் நீக்கப்படும்.
4. அரசு பென்ஷன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது.
5. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.
6. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும். அவர்களுக்கு பணம் வழங்கப்படும்.
7. புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications