இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்!

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், காவல்துறை இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 16,031 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, சாலை விபத்துகளைத் தடுக்கும் முக்கிய விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஒருபக்கம் டாஸ்மாக் கடைகளை மூடுவது முக்கிய பணியாக செய்து வரும் வேளையில், மறுப்புறம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும் கட்டுப்படுத்தியுள்ளது.

Drunk Driving

16 நாட்களில் 16,031 வழக்குகள் பதிவு

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை கடந்த 16 நாட்களில் தமிழகம் முழுவதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது 16,031 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட தினமும் 1000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை தீவிர சோதனை நடத்தியதன் விளைவாக அதிகளவிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் சோதனைச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கும் விகிதம் அதிகரித்துள்ளது.

14,100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்

இந்த 16 நாட்களில் மட்டும் 13,299 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட மொத்தம் 14,100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களின் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சாலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ரூ.3.13 கோடி அபராதம் வசூல்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக ரூ.3.13 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், சாலை விபத்துகள் மற்றும் மது அருந்துவது மூலம் ஏற்படும் குற்றங்கள் முழுமையாக குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு அருகில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இந்த சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை வெறும் அபராதம் வசூலிப்பதற்காக மட்டும் அல்ல, சாலை விபத்துகளைக் குறைத்து, பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+