Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடுமாறும் டிவி சேனல்கள்.. ஆணி வேரிலேயே கை வைத்த அரசியல் கட்சிகள்.. நம்ப முடியாத மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது ஐடி விங் காலத்தை தாண்டி, 'ஸ்ட்ரேட்டஜி' காலத்திற்குள் நுழைந்துவிட்டது. 2026 தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தும் அரசியல் கட்சிகள், இப்போது ஒரு புது அஸ்திரத்தை கையில் எடுத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்து வருகின்றன. அதுதான் - மூத்த செய்தியாளர்களை வளைப்பது. அவர்கள் மூலம் ஒவ்வொரு ஊரிலும், தொகுதியிலும் பிரச்சனைகளை கண்டுபிடிப்பது ஒருபுறம் எனில், மீடியாக்களில் எதிர்தரப்பை திட்ட, பொதுமக்களை கவரும் வகையில் செய்திகள் மற்றும் வீடியோக்கள் வடிமைக்க என ஸ்ட்ரேட்டஜி மாறி உள்ளது.

நியூஸ் ரூம் டூ வார் ரூம்

முன்பெல்லாம் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என்றால் வடநாட்டிலிருந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது சீன்கள் அடியோடு மாறிவிட்டது. தமிழகத்தின் அரசியல் நாடித் துடிப்பு தெரிந்த, மக்களின் மனநிலையை துல்லியமாக கணிக்கும் திறமை கொண்ட சீனியர் எடிட்டர்கள் மற்றும் அரசியல் செய்தியாளர்களை அரசியல் கட்சிகள் தங்களது "வார் ரூமுக்கு" அதிரடியாக இழுத்து வருகின்றன.

Tamil Nadu political parties master plan to hire News editors struggling TV channels

ஏன் இந்தத் தட்டுப்பாடு?

தமிழகத்தில் உள்ள முக்கிய டிவி சேனல்களின் முகங்களாக இருந்த பல எடிட்டர்கள், இப்போது ஏதாவது ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகர்களாகவோ அல்லது வியூக வகுப்பாளர்களாகவோ மாறிவிட்டார்கள். காலையில் எழுந்து இரவில் தூங்கும் வரை எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்ஏவாக விரும்பும் பல்வேறு தலைவர்கள் தங்களை ப்ரோமோட் செய்வதற்கு செய்தியாளர்களை பயன்படுத்துகிறார்கள்.

எப்படி பயன்படுத்துகிறார்கள்

காலையில் எழுந்து வாக்கிங் போவது முதல், மேடைக்கு போகும் முன்பு யாரிடம் எப்படி பேச வேண்டும். பேசியதை எப்படி புகழ்ந்து பேக்ரவுண்ட் மியூசிக்குடன் வீடியோ போடுவது, மக்களை காக்கும் கடவுள் போல சித்தரித்து வீடியோ எடிட் செய்வது என பல்வேறு ஜிக்ஜாக் வேலைகளுக்கு மாஸ்டர் மைண்டுகள் என்றால் மூத்த செய்தியாளர்கள் தான்.

ப்ரோமோட் செய்யப்படுகிறார்கள்

அவர்களின் வியூகப்படியே அன்றாடம் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களை ப்ரோமோட் செய்யும் பணிகளை செய்கிறார்கள். இதற்காக லட்சங்களில் வேலைக்கு ஆட்களை எடுத்து வார் ரூம் அமைத்து ஒவ்வொரு எம்எல்எல்ஏ எம்பிக்கள் செயல்படுகிறார்கள். இதனால் செய்தி நிறுவனங்களுக்கு மூத்த செய்தியாளர்கள் கிடைக்காமல் தள்ளாடுகின்றன.

மூத்த செய்தியாளர்களின் பணி என்னவென்றால், ஒரு செய்தியை எப்படிச் சொன்னால் மக்களிடம் எடுபடும்? எதிர்த்தரப்பு வைக்கும் விமர்சனத்தை எப்படி 'கவுண்டர்' செய்வது? சோஷியல் மீடியாவில் டிரெண்டை எப்படி உருவாக்குவது? இவையெல்லாம் கைதேர்ந்த செய்தியாளர்களுக்கு அட்சரப்படியாகத் தெரியும் என்பதால், கட்சிகள் அவர்களுக்கு கோடிகளில் கொட்டி கொடுத்து 'தூக்கி' விடுகின்றன.

முழிக்கும் டிவி சேனல்கள்

ஒரே நேரத்தில் பல சீனியர் ஜர்னலிஸ்ட்கள் சேனல்களை விட்டு வெளியேறுவதால், டிவி நிர்வாகங்கள் இப்போது திணறிப் போயிருக்கின்றன. முதலில் சேனல்கள் வேலையைவிட்டு அனுப்பின. இப்போது அவர்களே வந்துள்ளார்கள்

திறமையான ஆட்கள் பற்றாக்குறை

விவாதங்களை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்லவும், களத்தில் நின்று செய்தி சேகரிக்கவும் அனுபவமிக்க ஆட்கள் இல்லாமல் பல சேனல்கள் தடுமாறுகின்றன. இருக்கும் ஆட்களையாவது தக்கவைக்க வேண்டும் என்பதற்காக, சேனல்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

நம்பகத்தன்மை கேள்விக்குறி

ஒரு நியூஸ் சேனலில் நடுநிலையாகப் பேசிய ஒருவர், அடுத்த மாதமே ஒரு கட்சியின் வார் ரூமில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் வாசகர்களுக்கு, "அப்ப இவர் இத்தனை நாள் பேசினது யாருக்கு சாதகமா?" என்ற சந்தேகம் எழுகிறது.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் வேகம் எடுக்கும்

இது வெறும் ஆரம்பம்தான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். தேர்தல் நெருங்கும்போது இன்னும் பல 'பெரிய தலைகள்' செய்தித் துறையிலிருந்து அரசியல் ஆலோசகர்களாக அவதாரம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர்களுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், சேனல்கள் இப்போது 'புது ரத்தம்' பாய்ச்சும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.

மொத்தத்தில், 2026 போர் என்பது வெறும் அரசியல் தலைவர்களுக்கு இடையேயான போர் மட்டுமல்ல; இது அவர்களுக்குப் பின்னால் இருந்து மூளை வேலை செய்யும் முன்னாள் 'செய்தியாளர்களுக்கு' இடையேயான போராக இந்த தேர்தல் நிச்சயம் இருக்க போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+