தட்டித் தூக்குது தமிழ்நாடு அரசு.. ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் ரூ.5000! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தலா 5,000 ரூபாயை பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு வரும் தீபாவளிக்கே வெளியாகும் என கூறப்படுகிறது.

தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பானது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும் இலங்கை தமிழர்களும் பயன் பெற்றனர்.

Tamil Nadu Pongal Gift 2026

பொங்கல் பரிசு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசு உடன் ரொக்கமும் வழங்கப்பட்டது. 500 ரூபாய் முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் பின்பு அது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. கடைசியாக 2021 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய், அரிசி, சர்க்கரை கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாக வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

தமிழ்நாடு அரசு

இதை அடுத்து 2003 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2024 ஆண்டு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதேபோல 2025 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகப்பிலும் ரொக்க பரிசு வழங்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பரிசு வழங்கப்பட்ட நிலையில் 2024, 2025 ஆம் ஆண்டுகளில் ரொக்க பரிசு வழங்கப்படாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சட்டமன்ற தேர்தல்

இந்த நிலையில் தான் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமாக வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பொங்கலுக்கு தீபாவளி நாளில் பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட இதற்காக பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

5000 ரூபாய்

தமிழகத்தில் தற்போதைய சூழலில் சுமார் 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கிறது இதற்காக ஏறக்குறைய 12 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். அதற்கான நிதி ஆதாரத்தை தயார் செய்ய நிதியமைச்சகத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரொக்க பரிசு மட்டும் அல்லாமல், ஒரு கிலோ பச்சரிசி, வெள்ளம், முழு கரும்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு உள்ளிட்டவற்றையும் வேட்டி, சேலை ஆகியவற்றையும் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக ஸ்டாலின்

கடந்த 2021-ல் ஆட்சி முடிவடையும் நேரத்தில் 2500 ரூபாய் பரிசை ரொக்க பரிசை பொங்கல் பரிசாக வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது 5000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்த நிலையில், திமுக அதே தொகையை வழங்காதது ஏன் என அதிமுக கடந்த ஆண்டுகளில் கேள்வி எழுப்பி வந்தது. இந்த நிலையில் தற்போது அதே கோரிக்கையை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+