பொங்கல் பரிசுத்தொகை.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளியான அசத்தலான அறிவிப்பு.. தமிழக அரசு போனஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதன் ஒரு பகுதியாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. விற்பனையாளர் மற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக அவர்கள் பணியில் கையாளும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 50 காசு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பொங்கல் திருநாள் 2025- ஐ முன்னிட்டு அரசின் சிறப்புச் சேவை திட்டமான பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 விநியோகத் திட்டத்தினை செயல்படுத்தும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு விநியோகம் மேற்கொள்ளப்படும் குடும்ப அட்டைகளின் அடிப்படையில், ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.0.50 வீதம் வழங்க சம்மந்தப்பட்ட சங்கங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அத்தொகை நியாயவிலைக்கடை பணியாளர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

pongal 2025 ration shop tamil nadu 2025

அச்செலவுகள் முதலில் சங்கங்களின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அச்செலவுகள் அந்த ஆண்டிற்குரிய மானியத் தொகைக்கான முன்மொழிவில் சேர்க்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொங்கல் பரிசு:

பொங்கல் பரிசுத்தொகை தொடர்பாக தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பில், 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும். இதன் மூலம் மொத்தமாக 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என்று அறிவித்து உள்ளனர்.

அறிக்கை:

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட விரிவான அறிக்கையில், 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இவங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தவா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.20.94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும் , இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.

இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இங்க கேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+