ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந் தேதி தமிழ்நாடு வருகை- கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்பு!
ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார்.
சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமானத்தில் டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பின்னர் கோவை செல்கிறார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடத்தப்பட உள்ள மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

இதனையடுத்து மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்திருந்தார். இருப்பினும் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வருகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications