தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும்....சென்னை வானிலை மையம்
சென்னை : வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் மிதமான மழை பெய்யும் இடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் டிசம்பர் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் மழை பெய்யும் இடங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிச.13 மற்றும் 14
வடகிழக்கு பருவக் காற்று காரணமாக இன்று தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 14ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

டிச.15, 16 மற்றும் 17
மேலும் டிசம்பர் 15ம் தேதி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 16ம் தேதி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 17ம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 31 டிகிரி செல்ஸியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 17ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பபகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மழை பெய்த அளவு
கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை செம்மஞ்சேரி காஞ்சிபுரம் தலா 5, நந்தனம் 4, எம்ஆர்சி நகர், காட்டுக்குப்பம், கும்மிடிப்பூண்டி, டிஜிபி அலுவலகம், ஆர்எஸ்மங்கலம், வெம்பாக்கம் , அண்ணா பல்கலைக்கழகம், சோழிங்கநல்லூர், ஆரணி, எம்ஜிஆர் நகர் (சென்னை) தலா 3, எழிலகம், மேற்கு தாம்பரம், வாலாஜாபாத், தொண்டி, செம்பரம்பாக்கம் , போளூர், சென்னை விமான நிலையம், மணிமுத்தாறு, காவேரிப்பாக்கம், செய்யார், கலவை, உத்திரமேரூர், திருப்போரூர், திருவாலங்காடு, பாபநாசம், ஸ்ரீபெரும்புதூர், ஆவுடையார்கோயில், சேரன்மாதேவி தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications