மேற்குவங்க தேர்தல் வாக்குப்பதிவு LIVE: மாலை 3 மணி நிலவரப்படி 78.68% ஓட்டுப்பதிவு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தமாக 93.2% வாக்குகள் பதிவாகியது. 2ஆம் கட்ட தேர்தலில் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதற்கேற்ப 41 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

west bengal election 2026  west bengal assembly election 2026                                                       2026                                                                                   2026

Apr 29, 2026, 4:54 pm IST

மாலை 3 மணி நிலவரப்படி கிழக்கு புர்த்வான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 83.11 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக கொல்கத்தா தெற்கு மாவட்டத்தில் 75.38 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மொத்தமாக 78.68 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
Apr 29, 2026, 3:47 pm IST

மாலை 3 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 78.68 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
Apr 29, 2026, 3:02 pm IST

மாண்டீஸ்வர் சட்டசபை தொகுதியில் 35வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சில பொத்தான்கள் மீது ‘டேப்’ ஒட்டப்பட்டதாக எழுந்த புகாரால் ஓட்டுப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Apr 29, 2026, 2:21 pm IST

மதியம் 1 மணி நிலவரப்படி மேற்கு வங்க மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் அதிகபட்சமாக 64.57 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக ஹவுரா மாவட்டத்தில் 60.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
Apr 29, 2026, 1:42 pm IST

மதியம் 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
Apr 29, 2026, 1:25 pm IST

பவானிபூர் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வாக்குச்சாவடியை ஆய்வு செய்த போது, திடீரென அங்கிருந்த திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவரை சுற்றி வளைத்தனர். இதன்பின் "ஜெய் பெங்கால்" என்று முழக்கமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் சில நிமிடங்கள் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது
Apr 29, 2026, 1:05 pm IST

மேற்கு வங்கத்தில் ஃபால்டா பகுதியில் உள்ள ஹரிந்தங்கா உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல இடங்களில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜகவின் 'தாமரை' சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டன் மீது டேப் ஒட்டப்பட்டுள்ளதாக பாஜகவின் அமித் மாளவியா குற்றஞ்சாட்டி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Apr 29, 2026, 12:54 pm IST

இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார்
Apr 29, 2026, 11:59 am IST

மேற்கு வங்கத்தில் 11 மணி நிலவரப்படி 39.97% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
Apr 29, 2026, 11:09 am IST

“வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெறுவதை பார்க்க முடிகிறது. மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர்! மம்தா பானர்ஜி விடைபெற்றுச் செல்லப்போகிறார்” - மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி
Apr 29, 2026, 10:36 am IST

மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள்: எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி பேட்டி
Apr 29, 2026, 10:23 am IST

காலை 9 மணி நிலவரப்படி 142 தொகுதிகளில் 18.39% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக புர்பா பர்தமான் மாவட்டத்தில் 29.86% வாக்குகளும், ஹூக்ளி மாவட்டத்தில் 20.16% வாக்குகளும், கொல்கத்தா வடக்கில் 17.28% வாக்குகளும், கொல்கத்தா தெற்கில் 16.81% வாக்குகளும், நய்டாவில் 18.50% வாக்குகளும், 24 பர்கானாஸில் 17.80% வாக்குகளும், தெற்கு 24 பர்கானாஸில் 17.25% வாக்குகளும் பதிவாகி இருக்கிறது.
Apr 29, 2026, 9:49 am IST

காலை 9 மணி வரை 18.39% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Apr 29, 2026, 9:39 am IST

நேற்று இரவு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பாஜகவின் அராஜகம் எல்லை மீறி செல்கிறது.. வாக்குப்பதிவு அமைதியாக நடக்க வேண்டும்.. ஆனால் ஜனநாயகத் திருவிழாவை முழுமையாகச் சீரழித்துவிட்டார்கள். தேர்தலில் முறைகேடு செய்யவே பாஜக முயற்சிக்கிறது. பாஜகவை எதிர்க்க எங்களின் தொண்டர்களும், பொதுமக்களும் உயிரைக் கொடுக்கவும் துணிந்துவிட்டார்கள் - மம்தா பானர்ஜி பேட்டி
Apr 29, 2026, 9:16 am IST

பவானிபூர் தொகுதியில் உள்ள சக்ரபேரியா சர்வஜனில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார். லோக்சபா தேர்தலின் போது வீட்டில் இருந்தவாறே தேர்தலை கண்காணித்த மம்தா பானர்ஜி, இம்முறை வாக்குச்சாவடிக்கு விசிட் அடித்திருக்கிறார்.
Apr 29, 2026, 8:59 am IST

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்பி-யுமான அபிஷேக் பானர்ஜி வாக்களித்தார்
Apr 29, 2026, 8:29 am IST

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்ரா நாடியா தொகுதியில் வாக்களித்தார்
Apr 29, 2026, 8:16 am IST

எங்களின் போராட்டம் வெறும் தேர்தலுக்கானது மட்டுமல்ல.. நாங்கள் சமூக மாற்றத்திற்காக போராடி வருகிறோம்.. மக்களின் முன்னேற்றத்திற்காக களத்தில் நிற்கிறோம்.. மக்களும் மாற்றத்திற்கு தயாராகி வருகிறார்கள்.. வழக்கமாக 60 முதல் 65% வாக்குகள் பதிவாகும்.. ஆனால் இம்முறை 90 முதல் 95% வாக்குகள் பதிவாகிறது - கரக்பூர் சதார் தொகுதி பாஜக வேட்பாளர் திலீப் ஜோஷ்
Apr 29, 2026, 8:16 am IST

ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் எவ்வளவு பேர்?
Apr 29, 2026, 7:40 am IST

மேற்கு வங்கத்தில் ஜனநாயக கடமையை செய்யும் முதியவர்
Apr 29, 2026, 7:19 am IST

வாக்காளர்கள் ஆன்லைனில் பூத் ஸ்லிப் டவுன்லோடு செய்வது எப்படி?
Apr 29, 2026, 7:16 am IST

சோனார்பூர் தக்‌ஷின் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ரூபா கங்குலி அதிகாலையிலேயே வாக்களிக்க வந்துள்ளார்.
Apr 29, 2026, 7:05 am IST

மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
Apr 29, 2026, 6:52 am IST

மேற்கு வங்கத்தில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பொதுமக்கள்
Apr 29, 2026, 6:48 am IST

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 142 தொகுதிகளில் மொத்தமாக 1,448 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் அமைதியாக நடக்க பாதுகாப்பிற்காக மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான மத்திய ஆயுதப்படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+