சட்டம் ஒழுங்கு மோசம்- ஆளுநர் தலையீடு கோரி தவெக தலைவர் 'சி. ஜோசப் விஜய்' மனு அளித்தார்- ராஜ்பவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக மோசமடைந்து வருவதாகவும் அதன் சமீபத்திய வெளிப்பாடாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் தாக்குதல் சம்பவத்தையும் குறிப்பிட்டு இவை தொடர்பாக ஆளுநரின் தலையீடு கோரி மனு அளித்தார் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் என்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

vijay rn ravi

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும்; அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கையைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.

நடிகர் விஜய்யின் இந்த சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தமிழ், ஆங்கிலத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. ராஜ்பவன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு ஆளுநர் அவர்களை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக மோசமடைந்து வருவதாகவும் அதன் சமீபத்திய வெளிப்பாடாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் தாக்குதல் சம்பவத்தையும் குறிப்பிட்டு இவை தொடர்பாக ஆளுநரின் தலையீடு கோரி மனு அளித்தார். இவ்வாறு ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் திருக்குறள் நூலை வழங்கினார். அவருக்கு திரு. சீனி விசுவநாதன் அவர்கள் எழுதிய "கால வரிசையில் பாரதியார் படைப்புகள்" தொகுப்பு நூலை ஆளுநர் வழங்கினார் என்றும் ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+