சர்க்கரை அட்டைக்கு இதுவுமா? ரேஷனில் புது ஐட்டம்? தமிழக அரசு அறிவிப்பு வருமா? திருப்பூர் திருப்பம்?
சென்னை: விவசாயிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், தேங்காய் விவசாயிகள் கோரிக்கை வைத்தபடி உள்ளனர்.

அதேபோல, கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்றும், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் உடனடியாக விற்பனை செய்ய என்றும், உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, விவசாயிகள் சங்கம் போன்ற பல்வேறு விவசாய அமைப்புகள் இதே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.
விற்கக்கூடாது: எனினும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை.. இது தென்னை விவசாயிகளுக்குஅதிருப்தியை தந்து வருகிறது.மாத மாதம், 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழக அரசு கொள்முதல் செய்வதுடன், வருடந்தோறும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ரூ.1500 கோடிகளை மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள் எனவே, பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும்... பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம்: இதோ இன்றுகூட திருச்சி மாவட்டத்தில் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தலைமையில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேருவளை வாய்க்கால் பாசன சங்கத்தினர் மாநில துணைத் தலைவர் தியாகராஜன் தலைமையில் பருவ மழையில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மனு அளித்தனர்.
முன்னதாக பேரணியாக வந்த விவசாயிகள், திருச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சோளம் பயிரிட்டு விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அரசு வழங்கிடவும், தமிழக விவசாயிகளை வாழ வைக்காமல், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்கும் திமுக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.
பரபரப்பு: அதுமட்டுமல்லாமல், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, தமாக விவசாயம் பிரிவு சார்பில் விவசாயிகள் ஏராளமானோர் பாமாயில் எண்ணெயை சாலையில் கொட்டியும், பாதிக்கப்பட்ட சோள பயிர்களுடன் பேரணியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நடக்க போகும் வேளாண் பட்ஜெட்டில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications