Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவு மட்டும் போதுமா? சொத்து பத்திரங்களில் இதுவும் முக்கியம்.. அதென்ன சேர்க்கை - நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக்களை வாங்கினால் மட்டும் போதுமா? அந்த சொத்துக்களை முறையாக பத்திரப்பதிவு செய்தால் மட்டும் போதுமா? பத்திரப்பதிவு செய்தால் மட்டுமே, சொத்து உங்களுடையது என்பது ஆகிவிடாது. அப்படியானால் அதற்கு முறைப்படி என்ன செய்ய வேண்டும்? சேர்க்கை-நிராகரிப்பு என்றால் என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.

நிலம், வீடு என சொத்துக்களை விலை கொடுத்து வாங்கும்போது, அவை உங்களுடையதுதான் என்பதை தெரியப்படுத்தும் ஆதாரம்தான் ஆவணங்கள் எனப்படும் பத்திரங்கள்.

property documents registration department land bonds

ஆயுள் முழுக்க இந்த பத்திரத்தை பாதுகாக்க வேண்டும். அதனால்தான், பத்திரங்களில் மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், போன்ற விவரங்களை சரியாக பதிவிடுவது அவசியம். அதேபோல, உரிமையாளரின் பெயர், அடையாள அட்டை, முகவரி சான்று, சொத்து விற்பவரின் பெயர், அவரது அடையாள அட்டை மற்றும் மூல ஆவணத்தில் உள்ள விவரங்கள் போன்றவற்றையும் நன்கு கவனித்து வாங்க வேண்டும்.

பத்திரப்பதிவு: பத்திரத்தின் எல்லா பக்கத்திலும் விற்ற நபரின் கையொப்பம், அவரது அடையாள அட்டை விவரங்கள், பதிவாளர் கையொப்பம், ஸ்கேன் விவரங்கள், முத்திரைத்தாள் கட்டணம் விவரம், சொத்தின் மதிப்பு சரி என்பதற்கான சான்றிதழ், ஆவணங்களுக்கு வழங்கப்பட்ட எண், ஆவணத்தின் மொத்தப் பக்கங்கள் இவைகளையும் உற்று கவனித்து வாங்க வேண்டும்.

இதற்கு பிறகே பத்திரப்பதிவு செய்ய வேண்டும். பத்திரப்பதிவு முடிந்ததுமே, நீங்கள் சொத்தை மாற்றினால் அதன் பெயர் சொத்து மாற்றம் எனப்படும். எனவே, நீங்கள் ஏதாவது சொத்து வாங்கினால், பதிவு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டுவிட்மல், சரியான நேரத்தில் சொத்து மாற்றம் செய்யப்படுவதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

சேர்க்கை-நிராகரிப்பு: சொத்துக்களை பதிவுசெய்த பின்னர், நியமனம் அல்லது தாக்கல் நிராகரிக்கப்பட்டால், சொத்தை வாங்குபவர் அதன் உரிமையாளராகி, சொத்து தொடர்பான அனைத்து உரிமைகளும் அவருக்கே வந்து சேர்ந்துவிடும்.. சொத்துமாற்றம் செய்யும்போது பதிவின் அடிப்படையில், அந்த சொத்தின் உரிமையின் அதிகாரப்பூர்வ பதிவில் உங்கள் பெயர் சேர்க்கப்படும். ஒருவேளை, நிராகரிக்கப்பட்டால், முந்தைய உரிமையாளரின் பெயர் உரிமைப் பதிவுகளில் இருந்து அகற்றப்பட்டது என்று பொருள்.

பத்திரப்பதிவுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட பதிவகத்துக்கு சென்று, உங்கள் சொத்துக்களை பதிவு செய்யப்பட்டதற்கான பத்திரத்தினை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, உங்கள் பத்திரத்தின் பதிவு நம்பரை குறிப்பிட்டு, ஒரு சான்றிட்ட நகல் (Certified Copy of Sale Deed) வேண்டி மனு தந்து, அதனை 20 ரூபாய் பத்திரத்தில் சான்றிட்ட நகலாக தருவதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல, ஏற்கனவே நீங்கள் கையில் வைத்திருக்கும் ஒரிஜினல் பத்திரத்துடன், இந்த நகலின் பத்திரத்தையும் ஒப்பிட்டு, அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

பத்திரங்கள் பத்திரம்: பத்திரங்களை எங்காவது அவசர தேவைக்கு கொண்டு சென்றாலும், இந்த நகலை கொண்டு சென்றால் போதும்.. ஒரிஜினல் பத்திரத்தை ஒரு பாலித்தீன் கவர் அலலது ஃபைல்களில் வைத்துவிடலாம். ஆனால், ஜெராக்ஸ், ஒரிஜினல் பத்திரத்தை தனித்தனியாக வைக்க வேண்டும். அதேபோல, ஒரிஜினல் பத்திரத்திலிருக்கும் சர்வே எண், பத்திரப்பதிவு எண் போன்ற எண்களை வேறு எங்காவது சீட்டில் எழுதி வைத்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, பிறரிடமிருந்து வாங்கப்படும் சொத்துக்களை பதிவு செய்துவிட்டு, சரியான நேரத்தில் சொத்துக்களை மாற்றம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் அந்த சொத்திற்கு நீங்கள் முழு உரிமையாளராக முடியும். இதனால், உங்கள் சொத்துக்களை யாராலும் விற்கவோ, உரிமை கொண்டாடவோ முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+