தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 5,975 பேருக்கு கொரோனா; 6,047 பேர் டிஸ்சார்ஜ்; 97 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 6,047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா மற்றும் பிற நோய்களால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா மற்றும் அதனால் ஏற்பட்ட பிற நோய்களால் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்தியாவில் 7 லட்சம் பேர் சிகிச்சை
இந்தியாவில் தற்போது சுமார் 7 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும் 2-வது இடத்தில் தமிழகமும் இருக்கிறது. ஆனால் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.

5,975 பேருக்கு கொரோனா பாதிப்பு
இதனிடையே தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 68,111 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 5,975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 40,63,624 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டும் இருக்கிறது.

6,047 பேர் டிஸ்சார்ஜ்
இன்னொருபுறம் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சை முடிந்து 6,047 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,19,327 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா மற்றும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பிற நோய்களால் 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97. அரசு மருத்துவமனைகளில் 76 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 21 பேரும் உயிரிழந்தனர்.

கொரோனா மரணங்கள் 6,517
இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 6,517 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 53,541 மட்டும்தான். மாவட்டங்களில் சென்னையில் 1298 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 352, கோவையில் 392, திண்டுக்கல்லில் 178, காஞ்சியில் 222, சேலத்தில் 261, திருவள்ளூரில் 354 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மாவட்டங்களில் சென்னையில்தான் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்ததாக தேனியில் 7 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications