கொட்டும் கன மழை.. சென்னை முதல் குமரி வரை தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட இன்று 29 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
வரும் 28ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி வரலாறு காணாத மழை
நேற்று , தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்த நிலையில் பள்ளிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் வீடு திரும்ப முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். முதலிலேயே கணித்து அல்லது மழை ஆரம்பிக்கும் போது முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்காமல் சாலைகளில் முட்டி அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய பிறகு தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்தன. இதன் காரணமாக மாணவ மாணவிகள் வீடு திரும்பும் போது கடுமையாக அவதிப்பட்டனர். அவர்களை அழைத்து வருவதற்கு சென்ற பெற்றோரும் மிகுந்த சிரமப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில், 9 மணி நேரத்திலேயே 25 சென்டி மீட்டர் மழை பெய்திருந்தது. திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பள்ளி கல்லூரிகள்
கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக இன்று 29 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி, 18 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, சென்னை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்கள்
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

ரெட் அலர்ட்
இதனிடையே அதிகமான மழை பெய்யும் என்பதால், திருநெல்வேலி, தூத்துக்குடி , தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று முதல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்றும் ரெட் அலர்ட் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications