தமிழகத்தில் வீரியமாக வீசும் கொரோனா 2வது அலை - 3,645 பேர் பாதிப்பு, 15 பேர் மரணம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. இன்று மேலும் 3645 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,07,124 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 15 பேர் இன்று கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: சற்று குறைந்தது கொரோனா பாதிப்பு!

    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் 3500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:

    தமிழகத்தில் இன்று மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,07,124 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,809 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,68,722 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    Tamil Nadu sees over 3,645 coronavirus cases; reports 15 deaths

    தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,47,561 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,176 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,59,527 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,469 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் தற்போது 25,598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,804 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 9 பேரும் தனியார் மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் இதுவரை 2,00,93,091 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,856 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இன்று ஒரே நாளில் 1303 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,56,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+