ஐடி துறையில் 100 மில்லியன் டாலர் பொருளாதாரம்! சிலிக்கான் வேலியாக மாறும் சென்னை! அமைச்சர் நம்பிக்கை
சென்னை: ‛‛ஐடி துறையில் 100 மில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு என்பது எட்டக்கூடியது தான். இந்தியாவுக்கான சிலிக்கான் வேலியாக விரைவில் சென்னை மாறும்'' என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி) அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
தமிழகத்தில் 2030ம் ஆண்டுக்குள் மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பகத்துறையில் 100 பில்லியன் டாலர் வருவாயை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐடி துறையும் அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது.

அமைச்சர் பேட்டி
குறிப்பாக ஆறு பிரிவுகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஸ்டார்ட் அப்கள், உலகளாவிய திறன் மையங்கள், SAS உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஐடி துறையின் வருங்கால திட்டங்கள் குறித்து தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

100 மில்லியன் டாலர்
தமிழகத்தில் அமைந்துள்ள புதிய ஆட்சியின் கீழ் தகவல் தொழில்நுட்ப துறையில் நல்ல ஆலோசகர்கள் உள்ளனர். இதனால் ஐடி துறை நிச்சயம் வளர்ச்சி பெறும். 100 மில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை எட்டிப்பிடிக்க முயற்சிக்கிறோம். சென்னைய SASக்கு பெயர் பெற்றது. தரவுதள மையங்கள் (Data Centre) வளர்ந்து வருகின்றன. இதன்மூலம் புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கொண்டு வர முயற்சி கொண்டு வருகிறோம்.

உள்கட்டமைப்புகள்
இதனால் தமிழகத்தை நாடும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். டையர் 2, டையர் 3 நகரங்களில் உள்கட்டமைப்புகள் இருப்பதும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் எளிது என எடுத்து கூறி வருகிறோம். இது பயனளிக்கும்.

பயிற்சி அளிக்க திட்டம்
தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகள் அதிகம் இருப்பதோடு ஆண்டுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இன்ஜினியர்களாக வெளிவருகின்றனர். மேலும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இருந்து ஏராளமானவர்கள் படிப்பை முடித்து வருகின்றனர். இவர்கள் சர்வீஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரிவாக்க நிறுவனங்கள்
மேலும் தமிழகத்தில் நிலையான அரசு உள்ளது. வெளிப்படையான நிர்வாகம் உள்ளது. சாதி, கலவரங்கள் என்பது இல்லை. இந்த் விஷயத்தில் கர்நாடகத்தை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பாக உள்ளது. இருப்பினும் கர்நாடகத்தில் இருந்து ஐடி நிறுவனங்களை மாற்றுவது எளிதான காரியமாக இருக்காது. ஆயினும் அங்குள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்'' என்றார்.

ஐடி தலைநகராக சென்னை
மேலும் அமைச்சர் மனோதங்கராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛சென்னை இப்போது தரவுதள மைய மையமாக உள்ளது. நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை தடையின்றி திறக்க முடிகிறது. முன்னணி ஜிசிசிக்கள் சென்னையை தேர்வு செய்கின்றன. ஐடி, ஐடிஇஎஸ் நிறுவனங்கள் இங்கு வர விரும்புகின்றன. இதனால் இந்தியாவில் ஐடியின் தலைநகராக விரைவில் சென்னை மாறும்'' என தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications