தீபாவளி முடிந்த மறுநாளே.. சென்னையில் முக்கிய மாற்றம்.. தமிழ்நாடு அரசின் அறிவிப்பு.. பயணிகள் கவனம்!
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். சென்னையில் இருந்து பலரும் சொந்த மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் தீபாவளி தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ளது.
தீபாவளிக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர். சென்னை பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமமின்றி பயணிப்பதாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை பேருந்து நிலையங்களில் பெரிய அளவில் நெருக்கடி இல்லை. கூட்டம் இருந்தாலும் கடுமையான நெருக்கடி இல்லை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்.. எப்படி புக் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
புக்கிங் மையங்கள்: தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த மையங்களில் நேரடியாக சென்று புக் செய்ய முடியும். உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே 10 மையம் உள்ளது. இங்கே சென்று பணம் கொடுத்து புக் செய்ய முடியும்.
தீபாவளிக்கு மறுநாள்: இந்த நிலையில்தான் தீபாவளி தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி சென்னையில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மாநகர பேருந்து சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு பேருந்துகள் உள்ளன. இது சென்னை நகரம் உள்ளே இயங்கும் பேருந்துகள் ஆகும்.
தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மக்கள் எளிதாக வீடுகளுக்கு செல்ல.. இரவு நேரங்களில், அதிகளைகளில் எளிதாக பயணம் செய்ய இந்த பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு பேருந்துகளில் சொகுசு பேருந்து கட்டணம் வசூலிக்க போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பயண சீட்டுகள் 100% அதிகப்படுத்தியும் இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் உரிய வழித்தட பெயர் பலகை சரிவரப் பொருத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள மண்டல கிளை மேலாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
.
உதவி எண்கள்; தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மக்களின் பாதுகாப்பை கருதி இந்த எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்-(149) செயல்பாட்டில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது./
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications