வெறுப்பினை பரப்பும் ‘சிலர்’.. அன்பை மட்டுமே விதைத்து அரசியல் செய்தவர் கலைஞர்..! உதயநிதி புகழஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் என்று அன்போடு அழைக்கப்படும் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் தமிழகம் முழுவதும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பாடலாசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்ட கலைஞர் என அன்போடு அழைக்கப்படும் கருணாநிதி பராசக்தி உள்ளிட்ட படங்களில் எழுதிய வசனங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.

Kalaignar karunanidhi DMK udhaynithi stalin

தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த அவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் பதவிகளை அலங்கரித்தவர். ஒரு முறை கூட தோற்காத தமிழக சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றவர் கலைஞர் மட்டுமே.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியல் களத்தில் ஆக்டிவாக இருந்தவர் கலைஞர். 2011ல் ஆட்சியை இழந்த பிறகும் தீவிர அரசியலை ஈடுபட்டு வந்த அவர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இதை அடுத்து அவரது உடல் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர் அமைதிப் பேரணியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரை அருகே இருக்கும் கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணியில் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று.

மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர். கலைஞர் அவர்களின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது. கலைஞர் அவர்களின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது.

ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் ; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் அவர்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும்" என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+