இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை: இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை, குறிவைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களில், 321 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்புக்கு, ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் மூளையாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் செயல்பட்டு உள்ளபோதிலும், இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தமிழக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பெயரை குறிப்பிட்டு, இரு அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது போன்ற செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து சென்னையில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பெயருக்கும், எங்கள் அமைப்பின் பெயருக்கும் தொடர்பு இருப்பதால் இந்த விளக்கத்தை நாங்கள் அளிக்க விரும்புகிறோம்.
குண்டு வைப்பவர்கள், கொலை செய்பவர்கள் வெளிப்படையாக செயல்பட மாட்டார்கள். அந்த வகையில்தான் இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்பான பெயரும் இந்த தாக்குதலுக்கு பிறகு தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. எங்களுக்கும் அப்படித்தான் தெரியும். ஆனால், தமிழக தவ்ஹீத் ஜமாஅத் பெயரை தொடர்புபடுத்தி தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications