இனி நோ டீசல் பேருந்து.. தமிழ்நாட்டில் ரெடியான மின்சார பேருந்துகள்.. தனியாரை வைத்து இயக்க முடிவு!
சென்னை: தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்சார பேருந்துகள் பொது-தனியார்-கூட்டு மாதிரியின் கீழ் இயக்கப்படும், அதில் ஓட்டுநர்கள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும், நடத்துநர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசு ஒரு கிமீ அடிப்படையில் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் A முதல் புள்ளி B வரை மின்சார பேருந்துகளை இயக்கும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. 2026-ம் ஆண்டு முதல் புதிய டீசல் பேருந்துகள் வாங்குவதை நிறுத்தும் யோசனையுடன் தற்போதுள்ள டீசல் பேருந்துகளை எலெக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இருப்பினும், திட்டமிட்டபடி மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான திட்டங்கள் சரியாக நடப்பதை பொறுத்தே இது நடக்கும் என்று தமிழ்நாடு போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெண்டர்: சென்னையில் பேருந்துகளை இயக்கி வரும் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு (எம்டிசி) 100 மின்சார பேருந்துகளை வாங்க விரைவில் டெண்டர் விட திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியை KfW (ஜெர்மன் டெவலப்மென்ட் பேங்க்) மூலம் ஒவ்வொரு பேருந்துக்கும் சுமார் ₹2 கோடி வழங்கும். டெண்டரை வழங்க நிதி நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழுக்காக மாநில அரசு காத்திருக்கிறது என்று போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு இணையாக, முதற்கட்டமாக, உலக வங்கியின் நிதியுதவியின் மூலம் சுமார் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு ஒரு மாதத்தில் டெண்டர் விடவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 500 மின்சார பேருந்துகளுக்கு நீட்டிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய பேருந்துகள்: ஏற்கனவே தமிழ்நாட்டில் பல வருடங்களாக புதிய பேருந்துகள் வாங்காமல் பழைய பேருந்துகளை பயன்படுத்தி வந்த நிலையில் முதல்முறையாக புதிய பேருந்துகளை வாங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வணிக வாகன உற்பத்தியாளர் அசோக் லேலண்ட் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனத்திடம் (TN STU) 1,750 பேருந்துகளுக்கான ஆர்டரைப் பெற்றுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. சமீபத்தில் பல்வேறு மாநில போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆர்டர்களின் பின்னணியில் இந்த ஒப்பந்தமும் செய்யப்பட்டு உள்ளது என்று ஹிந்துஜா குழுமம் நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து இந்த ஆர்டரை உறுதிப்படுத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் இணைந்து சிறப்பான பேருந்துகளை வழங்க முடிவுசெய்துள்ளோம். தமிழ்நாட்டிற்கு பேருந்துகளை உறுதி செய்வதன் மூலம் இந்தியாவில் பேருந்துகளின் உற்பத்தியில் எங்கள் தலைமையை தக்க வைத்துக் கொள்ள உதவும்," என்று அசோக் லேலண்டின் சிஓஓ அனுஜ் கதுரியா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. ஏற்கனவே அமலில் இருந்த பச்சை நிற எஸ்இடிசி பேருந்துகள் புனரமைக்கப்பட்டு மஞ்சள் நிற பேருந்துகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 14 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications