பார்க்க மெட்ரோ மாதிரியே இருக்கும்.. ஆனா 180கிமீ வேகம்! தமிழ்நாட்டில் வரும் RRTS ரயில்.. எங்கு தெரியுமா?
சென்னை: வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் RRTS ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.
🔹சென்னை - திண்டிவனம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.
🔹சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.
🔹கோயம்புத்தூர் - சேலம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.

RRTS (Regional Rapid Transit System) என்பது விரைவான மண்டல ரயில் போக்குவரத்து முறை ஆகும். RRTS என்பது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான திட்டமாகும். இது நகரங்கள் மற்றும் புறநகரங்களை இணைக்கும் வேக ரயில் போக்குவரத்து அமைப்பாகும். டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் முதன்முதலில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், மெட்ரோ ரயில்களை விட வேகமாகவும், சாதாரண ரயில்களை விட நவீனமாகவும் இருக்கும்.
RRTSயின் முக்கிய அம்சங்கள்
அதிவேக ரயில்: மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இயங்கும்.
வசதிகள்: ஏசி கோச்சுகள், Wi-Fi, ஆட்டோமெட்டிக் கதவுகள்.
வேகமான பயணம்: மெட்ரோவிற்கு மாற்றாக நீண்ட தூரப் பயணிகளுக்கு உகந்தது.
சுற்றுச்சூழல் : மின்சாரத்தில் இயங்கும், குறைந்த கார்பன் அடையாளம்.
டெல்லி-NCR முதல் கட்டம்: டெல்லி-மேரட், டெல்லி-அல்வார், டெல்லி-பானிபத் ஆகிய வழிகளில் முதலில் செயல்படுத்தப்படுகிறது.
வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் RRTS ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்க்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.
பட்ஜெட் அறிவிப்பு
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார், இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.. தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றும் விதமாக சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகரம் அமைக்கப்படும். இதில் ஐடி பார்க்குகள், பன்னடுக்கு கட்டிடங்கள், புதிய ஐடி நிறுவனங்கள், மெட்ரோ, உலக தர வசதி, புதிய நிறுவனங்கள், வெளிநாட்டில் இருப்பது போன்ற வசதிகளுடன் குளோபல் சிட்டி அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக தரமான வசதிகள் எல்லாம் இருக்கும் வகையில் இந்த சிட்டி அமைக்கப்பட உள்ளது.
தமிழக பட்ஜெட்டில் வெளியான மற்ற அறிவிப்புகள்
சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும்.; இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும்.7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும். சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.
கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.
ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications