சான்ஸ் கிடைச்சதும்.. தமிழ்நாடு அரசு புகுந்து விளையாடுதே.. கண்ணை காட்டிய டெல்லி! சென்னையில் அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அமைக்கும் மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது. அதேபோல் 7425 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது போக 33500 கோடி ரூபாய் கடனை மத்திய அரசு உலக வங்கிகளிடம் இருந்தும் பெற்று கொடுக்கும். இந்த கடனை சென்னை மெட்ரோ நிர்வாகமே அடைக்கும்.. அதாவது தமிழ்நாடு அரசு அடைக்கும்.

ஆனால் மத்திய அரசு வாங்கித்தருவதால் தமிழ்நாடு அரசின் நேரடி கடன் சுமை குறையும். எளிதாக கடனும் கிடைக்கும். இதன் காரணமாக.. தற்போது சென்னையில் மெட்ரோ பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. திருமங்கலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மெட்ரோ கட்டம்-2 திட்டத்தின் கீழ் பல்வேறு மெட்ரோ நிலையங்களை CMRL கட்ட திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயிலோடு சில மாபெரும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

metro chennai

அங்கே 12 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் உள்ளே மெட்ரோ செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக டெண்டர் நேற்று விடப்பட்டது. இதில் 4வது மாடியில் மெட்ரோ நிலையம் அமைக்கப்பட உள்ளது.

சீனாவில் செயல்படும் மெட்ரோ நிலையங்கள் போல.. கட்டிடம் உள்ள மெட்ரோ செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக மெட்ரோ ரயில் செல்லும். அங்கு மெட்ரோ ரயில்கள் 12 மாடி கட்டிடத்தின் வழியாகச் சென்று மூன்றாவது மாடி நிலையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டிடத்திற்கான வடிவமைப்பு வெளியாகியுள்ளது. ஸ்டேஷன்களுடன் சேர்த்து இந்த கட்டிட மேம்பாடு செய்யப்படும் மற்ற இடங்களான கோயம்பேடு மற்றும் திருமயிலை ஆகியவை 12 மாடி கட்டிடத்தின் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 12 மாடி கட்டிடம் குடியிருப்பு அல்ல.. மாறாக மெட்ரோ பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன பிளான்: கட்டிடங்கள், மெட்ரோ நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஒன்றாகக் கொண்டு வருவதற்காக மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். மூன்று இடங்களில் நிலையங்கள் கட்டுவதற்கான செலவு கட்டம்-2 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டிற்காக, மாநில அரசிடம் நிதி கோருவோம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமங்கலத்தில், திருமங்கலம் மேம்பாலம் அருகே மூன்று வீடுகள் இருந்த 450 மீ நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் உள்ள மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ ரயில் நிலையத்துடன் ஒருங்கிணைந்த நடைபாதையை உருவாக்க திட்டம் இருந்தது. ஆனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியிருக்கும்.

மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இல் ஒப்பந்தம் TU02 (கெல்லிஸ் முதல் தரமணி வரை) சுரங்கப்பாதை கட்டுமான பணிகள், 16.02.2023 அன்று தொடங்கியது. "காவிரி" மற்றும் "அடையாறு" என இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.

இதில் "காவிரி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் 583 மீ. சுரங்கம் தோண்டும் பணியை முடித்து தற்போது வெற்றிகரமாக அடையாறு ஆற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்துள்ளது.

மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமானநிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ இரயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 28 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+